Author Topic: ~ கதம்ப சட்னி! ~  (Read 501 times)

Offline MysteRy

~ கதம்ப சட்னி! ~
« on: September 24, 2014, 08:23:53 PM »
கதம்ப சட்னி!



தேவையானவை:
பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 2 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு சேர்க்கவும். வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிள காய், வெந்தயம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து, எல்லாம் நன்கு வதங்கியதும் புளிக்கரைசல், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
இது வெள்ளைப் பணியாரம், வடை, தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.