மழைக்காலத்தில் நம்மை சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் ஈரப்பதத்துடனேயே இருப்பதால், பாக்டீரியாக மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியானது அதிகரித்து, விரைவில் நோய்களானது தொற்றிக் கொள்ளும். அதிலும் குழந்தைகளுக்கு தான் மிகவும் வேகமாக நோய்த்தொற்றுகள் ஏற்படும். எனவே மழைக்காலத்தில் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான உணவுகளை கொடுக்க வேண்டும்.
இங்கு குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் கொடுக்க வேண்டிய உணவுப்பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் சாதாரணமாக நாம் உண்பதாக இருந்தாலும், மழைக்காலத்தில் சற்று அதிகமாக எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.
மேலும் மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு எந்த ஒரு காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட கொடுக்கும் முன்னும், வினிகர் கலந்த நீரில் அவற்றை கழுவி, பின் சாப்பிடக் கொடுப்பது நல்லது. சரி, இப்போது குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் கொடுக்க வேண்டிய அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
முட்டை முட்டையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு இதனை மழைக்காலத்தில் தவறாமல் தினமும் ஒன்று சாப்பிட கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு புரோட்டீன்கள் மட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்ள் போன்றவையும் கிடைத்து, மழைக்காலத்தில் சளி, இருமல் போன்றவை தொற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள முடியும்.