Moringa Oleifera என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் தமிழர்களின் பாரம்பரிய முருங்கைக் கீரை, பல மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது எனபது உங்களுக்குத் தெரியுமா? இதனை அறிவியல் ரீதியாக மேலை நாட்டு விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில், முருங்கைக் கீரையின் சாறு 97 சதவீத கணைய புற்றுநோய் அணுக்களை (Pancreatic Cancer cells) வெறும் 72 மணி நேரத்தில் கொல்லும் தன்மை வாய்ந்தது எனும் விடயம் கண்டறியப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியா, ஓசியானியா, கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கா பகுதிகளில் பிரசித்துப் பெற்ற முருங்கைக்கீரை, இயற்கையாக இந்தியாவில் தான் அதிகளவில் விளைகின்றது. ஒரு வேளை இதனால் தான் அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியாவில் கணைய புற்றுநோய்க்கு (pancreatic cancer) பலியாகும் மக்களின் எண்ணிக்கை 84 சதவீதம் குறைவாக இருக்கக் கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதனைத் தொடர்ந்து, கருப்பை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மற்றும் “மெலனோமா” (melanoma) ஆகிய நோய்களை எதிர்க்கும் தன்மையும் முருங்கைக்கீரைக்கு உண்டு என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இறுதியாக, ஆயுர்வேதத்தில் நீண்ட காலமாக உபயோகத்திலிருக்கும் முருங்கைக்கீரை, கிருமிநாசினியாகச் செயல்படுவதோடு மட்டுமின்றி நீரழிவு நோயையும் தடுக்க வல்லது.
எனவே, மருத்துவ குணங்கள் நிரம்பிய இந்த அதிசயக் கீரையை நாள்தோறும் நம் உணவில் சேர்த்து வந்தால் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழலாம்!