Author Topic: தாயின் பாசமும், அறிவியலும்  (Read 642 times)

Offline Little Heart

இந்த விசேஷமான நாளில் இன்றைய அறிவு டோஸில் எதைப் பற்றி எழுதப்போகின்றேன் என்பதை நீங்கள் நிச்சயமாகத் தெரிந்து இருப்பீர்கள். அது வேறு ஒன்றும் இல்லை, அம்மா என்னும் கடவுளைப் பற்றி தான். குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நாம் பல தருணங்களில் கண்கூடாகப் பார்த்திருப்போம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் தன்னுடய தாயைப் பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினைக் குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல், தாயின் அரவணைப்பிற்குப் பிறகே சமாதானம் அடையும். இல்லாவிட்டால் காரணமே இல்லாமல் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டேயிருக்கும். ஆனால், இதுபோன்ற பாசத்தைத் தந்தையுடன் குழந்தை ஒருபோதும் வெளிப்படுத்துவது கிடையாது.

தாய்-குழந்தைக்கு மட்டும் அப்படி என்ன பிணைப்பிருக்கிறது என்று சில காலமாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். ஒரு வழியாக நியூயார்க்கைச் சேர்ந்த மவுன்ட் சினாய் மருத்துவ மைய ஆய்வாளர்கள் இதற்கானக் காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அது ஆக்சிடாசின் (Oxytocin) என்னும் ஒருவித இயக்குநீரே (hormone) ஆகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இயக்குநீர் தான் தாய்-பிள்ளை பிணைப்பைத் தூண்டுகிறது. அது மட்டுமல்லாமல் வேறு சில பணிகளிலும் இந்த இயக்குநீர் பணியாற்றுகிறது. தாய்க்கு பாலூட்டும் உணர்ச்சியை அதிகமாக்குவது, உடல் உழைப்பைத் தூண்டுவது, குழந்தைகளைத் தாயின் அருகாமையை எதிர்பார்த்துக் காத்திருக்க வைப்பது போன்ற பணிகளில் ஆக்சிடாசின் பங்கேற்கிறது.

தாயின் பாசத்தைப் போல் வேறு ஒன்றுமே இல்லை, அது எனக்கு மட்டும் இல்லை, உங்கள் எல்லோருக்குமே நன்றாகவே தெரிந்த ஒரு உண்மை ஆகும்.