ஒன்று தெரியுமா? உலகளாவிய நிலையில், சுமார் 1 மில்லியன் மக்கள் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் புற்றுநோய் பொதுவாக பரம்பரை ரீதியாகவும் முறையற்றப் பழக்க வழக்கங்களினாலும் உண்டாகிறது. எனவே, இன்றைய அறிவு டோஸில் நான் உங்களுக்குச் சில தவறான பழக்க வழக்கங்களையும் அவற்றை அமல் படுத்துவதின் விளைவாக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைப் பற்றியும் அறியத் தருகிறேன்.
பான்பராக், புகையிலை போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் 1.1 மடங்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமுள்ளது.
பீடி பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட 1.8 மடங்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.
புகை பிடிப்பவர்களுக்கு இரண்டு மடங்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்குப் புற்றுநோய் அபாயம் 1.8 மடங்காக உள்ளது.
அதிக சூட்டுடன் உணவு/பானங்களை உட்கொள்ளுபவர்களுக்கு மற்றவர்களை விடப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 4 மடங்கு அதிகம் உள்ளது.
பழக்கவழக்கங்களை மாற்றுவதால் நாம் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது