உலகில் உள்ள வியப்பூட்டும் உயிரினங்களில் பச்சோந்தியும் ஒன்று என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். பல காரணங்களுக்காகப் பச்சோந்திகள் ஆச்சரியப் படக்கூடிய உயிரினங்களாக இருக்கின்றன. அவற்றின் சிறிய இரண்டு பாதங்கள், அவற்றின் சிறிய உருண்டை போன்ற கண்கள், அவற்றின் சுருண்ட வால் பகுதி மற்றும் அதன் புற அசைவு வெளிப்பாடுகள் போன்ற எல்லாமே ஆச்சரியத்திற்குறியவை. இதிலும் மிகச்சிறந்தது அவற்றின் நிறம் மாறும் தன்மையே. ஆனால் இந்த நிறமாற்றம் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அதன் சுற்றுச் சூழழுக்கு ஏற்றவாறு மாறுவது அல்ல. பச்சோந்திகள் தங்கள் உடலில் ஏற்படும் வெளிப்புற, மனநிலை, மற்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு தங்கள் நிறங்களை மாற்றிக் கொள்கின்றன. உதாரணத்திற்கு, அவைகள் கோபமாக இருக்கும் பொழுது, பயப்படும் பொழுது, அல்லது வேறு நிலைகளில் இருக்கும் பொழுது நிற மாற்றச் சுரப்பி மூலம் தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன. தங்கள் உணர்வுகளைப் பறிமாற்றிக் கொள்ளவும் தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன.