நண்பர்களே, உங்களுக்குத் தெரியுமா? கிளிகளைப் பயிற்சியின் மூலம் சுமார் 200 வார்த்தைகள் மற்றும் சிறிய சொற்றொடர்கள் பேச வைக்கலாம். பொதுவாகக் கிளிகளின் மனித மொழியை அபினயம் செய்யும் கலையை அனைவரும் அறிந்ததே. இதற்காகவே பலரும் கிளிகளை வாங்கி வளர்க்கின்றார்கள். இதில் உண்மை என்னவென்றால், எல்லாப் பறவைகளும் பேசும் திறனைப் பெற்றிருப்பதில்லை, மாறாகத் தங்களைச் சுற்றியுள்ள அனைத்து ஒலிகளையும் அபினயம் செய்யும் திறமை உள்ளவை. சொல்லும் வார்த்தையில் உள்ள ஒலியை உள்வாங்கிப் பின்னர் அதை அபினயக்கின்றன. இதில் ஆச்சரியத்திற்குறிய விடயம் என்னவென்றால், கிளிகளை விடச் சிறந்த அபினயத் திறன் வாய்ந்த பறவைகள் உள்ளன.
மிகச்சிறந்த அபினயத் திறன் கொண்ட பறவை மைனா. ஆம், மைனாக்களால் ஆச்சரியப்படக்கூடிய அற்புதமான உண்மையான மனித ஒலிகள், வார்த்தைகள், இருமல், குறட்டை, கைபேசியின் அழைப்பொலிகள் போன்ற பலதரப்பட்ட சத்தத்தையும் மிகத் துல்லியமாக அபினயிக்க முடியும். காகம், அண்டங்காக்கைகள், மலை மைனாக்கள் போன்ற பறவைகள் மிகச் சிறந்த அறிவாற்றலும், அபினயிக்கும் திறமையும் கொண்ட மற்ற பறவைகளாகும்.