நண்பர்களே, நீங்கள் எப்போதாவது கண்களைச் சிறிது நேரம் மூடி, கண்களைத் திறந்த பின்னர் கசக்கி, நட்சத்திரங்களை போன்ற வடிவங்களைப் பார்த்து இருக்கின்றீர்களா? அல்லது மிளிரும் அதன் சிறிய ஒளியையாவது பார்த்து இருக்கின்றீர்களா? மிளிரும் அந்த ஒளியின் பெயர் ஒளிப்போலி (Phosphenes) எனப்படும். இது கண்களின் ஊடாக ஒளி உள்நுழையாமலேயே, ஒளியைப் பார்க்கும் ஒரு நிகழ்வு என வகைப் படுத்தப் படுகிறது. இப்படித் தேய்ப்பதால், விழித்திரையில் உள்ள செல்கள் இயந்திரத் தனமாகத் தூண்டப் படுகிறது. சில சமயங்களில், நீங்கள் கண்களைத் திறந்த பின்பும் கூட இந்த ஒளிப்போலிகளைக் காண முடியும். தியானம் செய்பவர்களும் இந்தப் ஒளிப்போலிகளை அனுபவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் அவர்கள் இதைப் பழங்காலத்திலேயே அறிந்திருப்பதாகச் சொல்கிறார்கள். பண்டைய கிரேக்கர்கள் இதை விரிவாக விவரித்தார்கள்