Author Topic: நெருங்கும் அபாயம்: மூளைக்கட்டியும், செல்லிடத் தொலைபேசி  (Read 668 times)

Offline Little Heart

சிறிய அளவிலான கதிரியக்கத்தால் பாதிப்பு ஏற்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், நிஜத்தில் குறைந்த அளவு கதிர்வீச்சுமே உடல் நலத்திற்கு நன்றல்ல. அது எந்த அளவில் இருந்தாலும் முற்றிலும் பாதுகாப்பற்றது. புற்றுநோயைக் குணமளிக்கக் கதிர்வீச்சு சிகிச்சை பயன்படுத்தப் பட்டாலும் கூட, அதன் பக்கவிளைவுகள் அதன் நன்மைகளை விட அதிகமானவை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கதிர்வீச்சு வெளிப்பாடு, பிற்காலத்தில் ஏற்படும் உடல் நலக் கோளாறுகளுக்கு மூல காரணியாக அமையும். கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்துவரும் செல்லிடத் தொலைபேசியின் (mobile phone) பயன்பாடு, பல சர்ச்சைகளைச் சந்தித்துள்ளது. உலக மக்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்தமாகத் தொலைபேசி வைத்துள்ளார்கள். அதிலும் சிலர் ஒன்றுக்கு மூன்று வைத்திருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

செல் பேசியிலிருந்து வெளிவரும் மின் காந்தக் கதிர்வீச்சுகளின் தீங்கு மற்றும் அபாயம் பற்றி விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகள் நடத்தி இருக்கின்றனர். இதில், 15 வயதிற்குக் குறைந்த குழந்தைகளை அடிக்கடி செல் தொலைபேசி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. தற்காலத்தில் குழந்தைகளின் இறப்புக்கு இரண்டாவது மூல காரணமாக இருப்பது மூளைக் கட்டியே (brain tumor) ஆகும் என்கிறது ஒரு ஆய்வு. சக்திவாய்ந்த மின் காந்த கதிரியக்கத்‌தின் தாக்கமே இதன் மற்றொரு காரணமாக இருக்கிறது.

எனவே, செல் பேசி உபயோகத்தைக் குறைப்பது உடலையும், உயிரையும் பாதுகாக்கும். நீங்கள் அதிகமாக உங்கள் கை தொலைபேசியைப் பயன் படுத்துவீர்களா, நண்பர்களே?