நண்பர்களே, நீங்கள் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். மேலும், இன்னும் நிறைய வேலை உள்ளது என்றும் எண்ணுவோம். இப்படியான நேரத்தில் உங்களைப் புத்துணர்ச்சி படுத்த என்ன செய்வீர்கள்? தண்ணீரை எடுத்து உங்கள் முகத்தில் வாரி அடிப்பீர்கள், சரி தானே? தண்ணீரை வாரி அடிப்பது ஏன் உங்களை விழிப்புடனும், சாந்தத்துடனும் இருக்க செய்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?
இது mammalian diving reflex எனப்படும் மறுவினை உடன் சம்பந்தப்பட்டது ஆகும். இது சுவாசத்தை மேம்படுத்தி அதன் மூலம் உடற்கூறு சார்ந்த வினைகளை உண்டாக்கி, நமது உடலை மேம்பட்டதாக உணர செய்யும் ஒரு மறுவினையாகும். எனவே, இனி எப்பொழுதாவது நீங்கள் அழுத்தத்தில் வருந்தினால், குளிர்ந்த நீரை முகத்தில் வாரி அடியுங்கள், உடனடியாக புதிய சக்தி பெற்ற மாதிரி உணர்வீர்கள்.