Author Topic: கணினியில் போலி மூளை ஒன்றை பொருத்தி உள்ளார்கள்  (Read 617 times)

Offline Little Heart

பல வருடங்களாக விஞ்ஞானிகள் கணினிகளுக்குச் செயற்கை அறிவாண்மை (artificial intelligence) பொருத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள். ஒரு கணினி அல்லது எந்திரத்திற்கு நுண்ணறிவு கொடுப்பதைச் செயற்கை அறிவாண்மை என்று அழைப்பார்கள். இப்படித் தான் ஜேர்மனி மற்றும் ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் சேர்ந்து, உலகில் நான்காவது இடத்தில் இருக்கும் அதி வேகமான கணினியில் (Super Computer) போலி மூளை ஒன்றைப் பொருத்தி உள்ளார்கள். இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்னவென்றால், நமது மூளையின் ஒரு சதவீதமான பகுதி, ஒரு நொடியில் செய்யும் வேலையை, அந்த அதிவேக கணினியிலும் செய்யப் பண்ணுவதே ஆகும். இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா…? நமது மூளை ஒரு நொடியில் செய்த அதே வேலையை, அந்த Super Computer செய்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்து இருக்கின்றது!

இப்போ கூறுங்கள் நண்பர்களே, நமது தலைக்குள் இருக்கும் மூளை உண்மையில் ஓர் பெரும் அதிசயம் தானே…?