Author Topic: உயரமான இடத்தில் வசிப்பது நோய்களில் இருந்து பாதுகாக்கும்  (Read 608 times)

Offline Little Heart

நண்பர்களே, உங்களுக்கு ஒன்று தெரியுமா? தற்கொலை விகிதத்திற்கும், உயரத்திற்கும் பலம் வாய்ந்த தொடர்பு இருக்கின்றது என்று கூறினால் அதை நம்புவீர்களா? ஒன்றும் பண்ண முடியாது, நம்பத் தான் வேண்டும்! அது ஏன் என்று இந்த அறிவு டோஸில் அறியத் தருகின்றேன்.

ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்காவிலுள்ள 2,584 மாவட்டங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தனர். அதன் படி, 1979-1998 ஆண்டுகளில் 596,704 தற்கொலைகள் அமெரிக்காவில் நடந்துள்ளன. இது மொத்த இறப்பான 42,868,100 மக்களில் 1.4 சதவீதம் ஆகும். இது சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு 100,000 மக்களில் 14 பேர் என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இந்த விவரங்களை ஆராய்ந்த போது தான், அந்தத் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. மக்களின் வயது, பாலினம், இனம் அல்லது அவர்களின் வருமானம் போன்ற காரணிகளைக் காட்டிலும், அவர்கள் வசித்த இடத்தின் உயரம் முக்கியப்பங்கு வகித்தது.

தற்கொலை விகிதத்தினை 50 உயரமான மற்றும் 50 தாழ்ந்த மாவட்டங்களுக்குக் கணக்கிட்டபோது, உயரமான இடங்களில் 4.2 தற்கொலைகளுக்கு, தாழ்ந்த இடங்களில் 1 தற்கொலை தான் நிகழ்ந்தது என்பது தெரியவந்தது. அதாவது உயரத்தினைப் பொறுத்து அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் விகிதமும் மாறுபட்டது. இது சாதாரண ஒற்றுமையாக இல்லை என்பதால், இது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த ஆய்வுகளின் முடிவில் தெரிந்தது இரு விஷயங்கள்: ஒன்று, உயரமான இடங்களில் வசிப்பது பல நோய்களிலிருந்து பாதுக்காப்பைத் தருகிறது என்பதும், இரண்டாவது, அதைவிட வியப்பூட்டும் விடயமாக உயரமான இடங்களில் தற்கொலை விகிதம் அதிகமாகும் வாய்ப்பும் உள்ளது என்பதும் தான். கடல்மட்டத்திலிருந்து உயரமான இடங்களில் வசிப்பவர்களுக்கு இது கண்டிப்பாக அதிர்ச்சியளிக்கும் செய்தியாக இருந்தாலும், இது கணக்கெடுப்பு முடிவுகள் மட்டுமே. எனவே பயந்துவிடாதீர்கள், நண்பர்களே. இருந்தாலும், இது மிகவும் வியப்பூட்டும் விடயம் அல்லவா?