Author Topic: ~ செரிமானத்துக்கு உதவும் ஓமவல்லித் துவையல்! ~  (Read 425 times)

Offline MysteRy



'சாம்பார், ரசம்கூட வேண்டாம்மா. சாப்பாட்டில் ஒரு துவையல் இருந்தா போதும்...’ என்பான் என் மகன் விஜய். அவனுக்காகவே தினமும் காய்கறி, தானியங்கள், கீரை வகைகள் எல்லாவற்றிலும் புளிப்பு, காரம் சேர்த்து வாசனையோடு சுவையான துவையல் செய்வேன். ஓமவல்லி, துளசி, நார்த்தங்காய் இலை, எலுமிச்சம் பழ இலை என்று தினம் தினம் என் வீட்டில் விதவிதமான துவையல்தான்' என்று சொல்லும் சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஆர்.சாருலதா, மகனுக்கு சமைக்கும் துவையல்களில் ஒன்றின் செய்முறையை இதோ நமக்காகப் பரிமாறுகிறார். அது ஓமவல்லித் துவையல்.

தேவையானவை:

ஓமவல்லி இலை  25, புதினா  ஒரு கைப்பிடி, புளி  சிறு உருண்டை, காய்ந்த மிளகாய்  4, உளுத்தம்பருப்பு  ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு  8 பல், உப்பு, எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: 

 உளுத்தம்பருப்பை சேர்த்து வதக்கி, அதில் புதினாவையும் சேர்த்து வதக்கவும். இதனுடன், மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும். பூண்டு வாசனை பிடிக்காதவர்கள், பெருங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிட ஏற்ற சுவையான, சத்தான துவையல். 

சித்த மருத்துவர் ரமேஷ்:

'அந்தக் காலத்தில் சின்னக் குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டினால் 'ஓம வாட்டர்’ தான் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு மருத்துவக் குணம் வாய்ந்தது ஓமம். நெஞ்சுச் சளி, இருமல் ஆகியவற்றைப் போக்கும். வியர்வை வெளியேற உதவும். வாய்க்கசப்பு, வயிறு தொடர்பான நோய் வராமல் காக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். சிறுநீரை எளிதில் வெளியேற்றும்.  நரம்புகளுக்கு மிகவும் நல்லது. தினமும் இரண்டு  ஓம இலைகளைப் பறித்து, சாப்பிட்டுவந்தால் வியாதிகளில் இருந்து விடுதலைதான்!'