உன் அம்மாவுடன் பேசும்போது
ரகசியமாய் உன்னை பார்த்து
நான் கண்ணடிக்க
நீ முகம் சிவக்கிறாய்
பார்க்க அழகாகத்தானிருக்கிறது
என்றாலும்
அது கோபத்தால் சிவந்த சிவப்பா
இல்லை
நாணத்தால் சிவந்த சிவப்பா
புரியவில்லை எனக்கு
நான் உரசாவிட்டாலும்
உன் துப்பட்டா உரசும்
தினமும் என்னை
நீ கடந்து செல்கையில்
உன்னை தெரியுமுன்பே
உன் அழகை தெரியும் எனக்கு
கொஞ்ச நேரம் மெளனித்திரு
உன் அழகுடனும்
எனை பேசவிடு