Author Topic: ~ டபுள் டெக்கர் ட்ரீட் ~  (Read 435 times)

Offline MysteRy

~ டபுள் டெக்கர் ட்ரீட் ~
« on: September 11, 2014, 09:25:28 PM »
டபுள் டெக்கர் ட்ரீட்



தேவையானவை:
குலாப் ஜாமூன் மிக்ஸ் - 2 கப், வெண்ணெய் - 4 டேபிஸ்ஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், கோகோ பவுடர் - 2 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - 2 சொட்டு, சாக்லேட் எசென்ஸ் - 2 சொட்டு, வெள்ளரி விதை - அலங்கரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

குலாப் ஜாமூன் மிக்ஸை இரண்டு பாகங்களாகப் பிரித்து ஒரு பகுதியுடன் கோகோ பவுடரை சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும். ஒரு பகுதியை தனியாக வைக்கவும்.

வாணலியில் முக்கால் கப் சர்க்கரையைப் போட்டு ஒற்றைக் கம்பி பதத்தில் பாகு வைத்து அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் வெண்ணெய், வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். வெண்ணெய் கரைந்ததும் இறக்கி, தனியாக வைத்த ஒரு பகுதி ஜாமூன் மிக்ஸை சேர்த்து நன்கு இறுகி வரும் வரை கிளறவும். நெய் தடவிய தட்டில் சிறிதளவு வெள்ளரி விதையைத் தூவி, அதன் மேல் இந்த கலவையைக் கொட்டி பரப்பிவிடவும்.

மீதமுள்ள சர்க்கரையில் ஒற்றைக் கம்பி பதத்தில் பாகு காய்ச்சி... 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய், சாக்லேட் எசென்ஸ் சேர்த்து இறக்கவும். கோகோ பவுடர் கலந்து வைத்த  ஜாமூன் மிக்ஸை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். இதனை, தட்டில் பரப்பி வைத்த  கலவையின் மீது மேல் கொட்டி சமப்படுத்தி, கொஞ்சம் வெள்ளரி விதையைத் தூவி அலங்கரித்து, ஆறிய பின் துண்டுகள் போடவும்.