Author Topic: ~தக்காளி - பைனாப்பிள் சாலட் ~  (Read 482 times)

Offline MysteRy

தக்காளி - பைனாப்பிள் சாலட்



தேவையானவை:
சின்ன தக்காளி - 10 (நறுக்கிக் கொள்ளவும்), நறுக்கிய பைனாப்பிள் - துண்டுகள் - 10, நறுக்கிய குடமிளகாய் துண்டுகள் - 20, நறுக்கிய பனீர் துண்டுகள் - 10, வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் - 10 (மேலே சொன்ன எல்லாவற்றையும் தக்காளி துண்டு அளவுக்கே நறுக்கிக்கொள்ளவும்), மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
எண்ணெயைக் காயவைத்து, தக்காளி, உருளைக்கிழங்கு, குடமிளகாய் துண்டுகளை சேர்த்துப் புரட்டி, பனீர் துண்டுகள், மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். பத்து நிமிடத்துக்குப் பிறகு இறக்கி பைனாப்பிள் துண்டுகள் சேர்க்கவும். மதிய வேளைக்கு உகந்த சாலட் இது.
குறிப்பு: விரும்பினால் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.