Author Topic: ~ செம்பருத்திப்பூ பச்சடி ~  (Read 511 times)

Offline MysteRy

செம்பருத்திப்பூ பச்சடி



தேவையானவை:
ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி - 20, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
செம்பருத்திப்பூவை கழுவி சின்னதாக நறுக்கி, தயிர், பெருங்காயத்தூள், உப்பு கலந்து வைக்கவும், கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, செம்பருத்திப்பூ கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
பாதத்தில் ஏற்படும் பித்தவெடிப்புக்கு இது சிறந்த நிவாரணி!