Author Topic: ~ 30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்! ~  (Read 1616 times)

Offline MysteRy

விளாம்பழ அல்வா



தேவையானவை:
விளாம்பழ கூழ் - ஒரு கப் (மிக்ஸியில் அரைத்தது), தேங்காய் துருவல் - அரை கப், ரவை - ஒரு கப், நெய் - ஒரு கப், முந்திரி - 10 (நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்), சர்க்கரை - இரண்டரை கப்.

செய்முறை:
ரவையை சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் கலந்து அடுப்பில் வைத்து, நன்கு கிளறி, சுருண்டு வரும் சமயம் இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

இனிப்பு அப்பம்



தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், உளுந்து - கால் கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், பொடித்த வெல்லம் - ஒன்றேகால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
பச்சரிசி, உளுந்து, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். வெல்லத்துடன் அரை கப் நீர் சேர்த்து சூடாக்கி, கரைந்ததும் வடிகட்டவும்.
ஊறிய அரிசி, பருப்புகளுடன் தேங்காய் சேர்த்து நைஸாக அரைக்கவும். அதனுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, கரைத்த மாவை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஊற்றி, இருபுறமும் திருப்பி விட்டு, வெந்தபின் எடுக்கவும்.

Offline MysteRy

கோயில் புளியோதரை



தேவையானவை:
பச்சரிசி - 2 கப், புளி - எலுமிச்சை அளவு,  மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுந்து, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, உப்பு, நல்லெண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.

பொடி செய்ய:
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், சிறிய விரலி மஞ்சள் - 2, மிளகு - 2 டீஸ்பூன். 

செய்முறை:
பச்சரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்து ஆறவிடவும். புளியை ஒன்றரை கப் நீரில் கரைத்து வடிகட்டவும். பொடி செய்யக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கறிவேப்பிலை சேர்த்து வைக்கவும். சாதத்தில் புளிக்கலவை, வறுத்துப் பொடித்த தூள் சேர்த்து நன்கு கிளறினால்... மணக்க மணக்க கோயில் புளியோதரை தயார்.

Offline MysteRy

உலர்திராட்சை பர்ஃபி



தேவையானவை:
உலர்திராட்சை - ஒரு கப் (வெந்நீரில் ஊறவைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்), சர்க்கரை - அரை கப், முந்திரி - 10 (சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்), பால் - 3 கப், நெய் - 50 கிராம்.

செய்முறை:
அடி கனமான வாணலியில் நெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். கலவை சற்று கெட்டியானதும் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும். வாணலியில் ஒட்டாமல் வரும் சமயம் நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.

Offline MysteRy

டூட்டி ஃப்ரூட்டி பர்ஃபி



தேவையானவை:
டூட்டி ஃப்ரூட்டி - அரை கப், தேங்காய்த் துருவல் - ஒரு கப், சர்க்கரை - ஒன்றேகால் கப், நெய் - சிறிதளவு.

செய்முறை:
அடி கனமான வாணலியில் நெய் நீங்கலாக மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கிளறவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). அவ்வப்போது நெய் சேர்த்து ஓரங்களில் ஒட்டாமல் வரும்வரை கெட்டியாக கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஆறிய பின் துண்டு கள் போடவும்.

Offline MysteRy

கல்கண்டு பாத்



தேவையானவை:
பச்சரிசி - ஒன்றரை கப், பால் - ஒரு லிட்டர், டைமண்ட் கல்கண்டு - 2 கப் (பொடித்துக்கொள்ளவும்), நெய் - 50 கிராம், முந்திரி - 10 (நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை:
அரிசியுடன் பால், ஒரு கப் நீர் சேர்த்து மிதமான தீயில் குழைய வேகவிடவும் வெந்ததும் பொடித்த கல்கண்டை சேர்த்து நன்கு கிளறவும். கல்கண்டு கரைந்து சாதத்தோடு நன்றாகக் கலந்ததும் இறக்கவும். இதனுடன் நெய்யில் வறுத்துப் பொடித்த முந்திரி, மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

Offline MysteRy

மிளகு தாளிதம்



தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், முந்திரி - 10, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, நெய் - தேவையான அளவு.

பொடி செய்ய:
மிளகு, சீரகம், துவரம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று.

செய்முறை:
பச்சரிசியுடன் சிறிது உப்பு சேர்த்து உதிர் உதிரான சாதமாக வடித்துக்கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, மிக்ஸியில் பொடி செய்யவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து கடுகு, முந்திரி, கறிவேப்பிலையை தாளிக்கவும். சாதத்துடன் தாளித்த கலவை, வறுத்துப் பொடித்து வைத்துள்ள பொடி, தேவையான உப்பு, கொஞ்சம் நெய் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
« Last Edit: September 11, 2014, 02:45:23 PM by MysteRy »

Offline MysteRy

வெல்ல அவல்



தேவையானவை:
வெள்ளை அல்லது சிவப்பு கெட்டி அவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - அரை கப், தேங்காய்த் துருவல் - கால் கப், முந்திரி - 10 (நெய்யில் வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:
அவலை சுத்தம் செய்து ஒரு கப் சூடான நீரில் ஊறவிடவும். பொடித்த வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து சூடாக்கி, கரைந்ததும் வடிகட்டவும். ஊறிய அவலுடன் வெல்லக் கரைசல் சேர்த்து நன்கு கிளறவும். இதனுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி ஆகியவற்றை சேர்த்துக் கிளறி பரிமாற வும்.

Offline MysteRy

பாதாம் பர்ஃபி



தேவையானவை:
பாதாம் பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், நெய் - சிறிதளவு.

செய்முறை:
பாதாம் பருப்பை ஊறவைத்து, தோலெடுத்து, ஈரம்போக காயவைத்து மிக்ஸியில்பொடி செய்யவும் (மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி பொடித்தால்... நைஸான பொடி கிடைக்கும்). வாணலியில் சர்க்கரையை சேர்த்து, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். கம்பி பதம் வந்தவுடன் பாதாம் பருப்பு பொடியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி கிளறிக்கொண்டே வரவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் சமயம் நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஆறியதும் டைமண்ட் ஷேப்பில் துண்டுகளாக்கவும்.

Offline MysteRy

வெள்ளை மொச்சை சுண்டல்



தேவையானவை:
காய்ந்த மொச்சை - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப் பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
மொச்சையை வெறும் வாணலியில் வறுத்து தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இதனுடன் வேகவைத்த மொச்சை, உப்பு, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால், நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவலாம்.

Offline MysteRy

பீட்ரூட் பாயசம்



தேவையானவை:
பீட்ரூட் துருவல் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், பால் - இரண்டே கால் கப்,  நெய் - 2 டீஸ்பூன், முந்திரி - 8, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:
முந்திரியை நெய்யில் வறுத்து, ஒன்றிரண்டாக பொடிக்கவும். பீட்ரூட் துருவலுடன் கால் கப் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மீதமுள்ள பாலை நன்கு காய்ச்சி... பீட்ரூட் விழுது, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, இதனுடன் வறுத்துப் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
கலர்ஃபுல்லான இந்த பாயசம், விட்டமின் சத்து நிறைந்தது.

Offline MysteRy

கடலைப்பருப்பு சுண்டல்



தேவையானவை:
கடலைப்பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை:
கடலைப்பருப்பை உப்பு சேர்த்து மலர வேகவைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை  மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண் ணெய் விட்டுகடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, நறுக்கிய வெங்காயத்தா¬ளை மேலே தூவவும்.

Offline MysteRy

கறுப்பு உளுந்து சுண்டல்



தேவையானவை:
கறுப்பு உளுந்து - ஒரு கப்,  பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கறுப்பு உளுந்தை 6 மணி நேரம் ஊறவிட்டு, உப்பு சேர்த்து மலர வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, வேகவைத்த உளுந்தை சேர்க்கவும். இதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய மல்லித்தழை, உப்பு சேர்த்துக் கிளறி... இறுதியாக துருவிய பனீர் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

கார்ன்ஃப்ளேக்ஸ் பாயசம்



தேவையானவை:
கார்ன்ஃப்ளேக்ஸ் - ஒரு கப், பால் - 2 கப், சர்க்கரை - முக்கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 8 (சிறிதளவு நெய்யில் வறுத்து, ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு நெய் விட்டு கார்ன்ஃப்ளேக்ஸை வறுக்கவும். பிறகு முக்கால் கப் கார்ன்ஃப்ளேக்ஸை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பாலை நன்கு காய்ச்சி, சர்க்கரை, பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸை சேர்த்துக் கொதிக்கவிடவும். ஓரளவு கெட்டியானதும் நெய்யில் வறுத்துப் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, பரிமாறும் சமயம் மீதமுள்ள கார்ன்ஃப்ளேக்ஸை தூவி பரிமாறவும்.

Offline MysteRy

இனிப்பு பூரி



தேவையானவை:
கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், வாழைப்பழம் - 2, முந்திரி - 8 (ரவை போல பொடிக்கவும்), சர்க்கரை - கால் கப், தயிர் - ஒரு டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பால் - 4 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரைத்தூள் - கால் கப், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:
சர்க்கரைத் தூள், எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, தேவையான நீர் விட்டு, பூரி மாவு பதத்தில் பிசைந்து, சற்று கனமான சின்னச் சின்ன பூரிகளாக திரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். பொரித்த பூரியின் மேல் சர்க்கரைத் தூள் தூவி பரிமாறவும்.