Author Topic: தூக்கம் .....  (Read 465 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
தூக்கம் .....
« on: September 09, 2014, 05:06:30 PM »
தூக்கம்


உன்
அறிமுகத்திற்கு முன்பு (அ.மு )
அறிமுகத்திற்கு பின்பும் (அ.பி )

ஒரு சிறு ஒப்பீடு!!

(அ. மு )

சீராப்பூஞ்சியின்
சீரானான சிறப்பு
சீதோசனமாய் ....

(அ.பி )

தூறல் விட்ட :
சன்னலோர
சாரல்களாய் ....

**************************************

( அ.மு )

அரும்
ஊக்கத்தின்
தாக்கமாய் .....

( அ . பி )

வெறும்
ஏக்கத்தின்
தேக்கமாய் ...

**************************************

தூக்கமே கலாச்சாரமாய் கருதிடப்படின் ...

(அ .மு )

ஈடிணை இல்லா
இந்தியா வாய் ..


(அ.பி )

அநியாய
அமெரிக்காவாய்

**************************************
(அ.மு)

அடைமழையினிடை
மடைகடந்து பாயும்
வெள்ளமாய் .....

(அ .பி)

கடுங்கோடையில்
வறண்டு விரிசல்விட்ட
விளைநில பள்ளமாய் ..
....