Author Topic: ~ குக்குரங்குகள் பற்றிய தகவல்கள்:- ~  (Read 646 times)

Offline MysteRy

குக்குரங்குகள் பற்றிய தகவல்கள்:-




குக்குரங்கு (Cebuella pygmaea) என்பது தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும், மிகவும் சிறிய உருவுடன் காணப்படும், ஒரு குரங்கு. வாலை விட்டுவிட்டுப் பார்த்தால் உடல் நீளம் 14 முதல் 16 செமீ கொண்ட சிற்றுருவம். இக்குக்குரங்கு அமேசான் மழைக்காடுகளில் கீழ்நிலைப் பகுதிகளில் வாழ்கின்றது. மேற்கு பிரேசில், தென்மேற்குக் கொலம்பியா, கிழக்குஈக்வெடார், கிழக்குப் பெரு நாடு, வடக்கு பொலிவியா போன்ற நாட்டுப்பகுதிகளில் உள்ள காடுகளில் கடல்மட்டத்தில் இருந்து 200மீ முதல் 940 மீ உயரமான பகுதிகள் வரையில் இவை பெரும்பாலும் வாழ்கின்றன. உயிரினப் பாகுபாட்டில் தென்னமெரிக்காவில் வாழும் குரங்குகளில் மார்மோசெட்டு (marmoset) எனப்படும் சிறு உருவம் உடைய பேரின வகைகளைகாலித்திரிக்சு (Callithrix), மைக்கோ (Mico) என்னும் இரண்டு பேரினத்தின் கீழ் குறிப்பர். ஆனால் அவற்றில் இருந்து சிறிதே வேறுபடுமாறு குக்குரங்குகள், செபுயெலா அல்லது செபூயா (Cebuella) எனும் தனிப்பேரினமாக, காலித்திரிசிடே (Callitrichidae) என்னும் குடும்பவகையில் சேர்க்கப்பட்டுள்ளன. குக்குரங்குங்கள் இயற்கையில் ஏறத்தாழ 11-12 ஆண்டுகளைத் தம் வாழ்நாளாகக் கொண்டுள்ளன, ஆனால் உயிர்க்காட்சி சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன.