Author Topic: ~ ஓட்ஸ் வாழைப்பூ மினி ரொட்டி ~  (Read 673 times)

Offline MysteRy

ஓட்ஸ்  வாழைப்பூ மினி ரொட்டி



தேவையானவை: 
சிறிய வாழைப்பூ - ஒன்று,
பெரிய வெங்காயம் - ஒன்று,
ஓட்ஸ் - 2 கப்,
எலுமிச்சைச் சாறு - 4 டீஸ்பூன்,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
சிறிய பச்சை மிளகாய் - 8,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
வெண்ணெய் - 100 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
ஓட்ஸை லேசாக வறுத்துப் பொடி செய்யவும்.
இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு மூன்றையும் சேர்த்து விழுதாக அரைக்கவும். வெங்காயத்தையும், வாழைப்பூவையும் பொடியாக நறுக்கி வெண்ணெயில் வதக்கவும்.
இதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
அகலமான பாத்திரத்தில் ஓட்ஸ், அரைத்த இஞ்சி, பச்சை - மிளகாய், விழுது, வதக்கிய வாழைப்பூ கலவை, கொத்தமல்லி ஆகியவற்றைக் கலந்து பிசையவும்.
இட்லித் தட்டில் சிறிதளவு வெண்ணெயைத் தடவவும்.
ஓட்ஸ் கலவையை சிறிய ரொட்டிகளாகத் தட்டி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேகவிடவும்.
காரசாரமான சட்னியுடன் பரிமாறவும்.
வாழைப்பூவுக்கு பதில் காளானையும் பயன்படுத்தலாம்.