பழமொழிகளைப் பற்றிய பழமொழிகள்....

* உலகில் நல்லறிவுகள் எல்லாம் பழமொழிகளாக்கப்பட்டிருக்கின்றன. -இங்கிலாந்து
* பழமொழிப் புத்தகத்தை ஒருவன் படித்துவிட்டால் திறமையாகப் பேச முயற்சி தேவை இல்லை.
-இங்கிலாந்து
* பழமொழிகள் அனுபவத்தின் குழந்தைகள். -இங்கிலாந்து
* கடுகளவும் உண்மையில்லாத பழமொழியே இல்லை. -ரஷ்யா
* உணவுக்கு உப்பு எப்படியோ, அப்படியே பேச்சுக்குப் பழமொழி. -ரஷ்யா
* அறிவிலிருந்து பழமொழி உண்டாகிறது; பழமொழியிலிருந்து அறிவு உண்டாகிறது. -ரஷ்யா
* ஒரு பழமொழியிலிருந்து பெரிய ஆறுதல் உண்டாகலாம். -ஸ்விட்சர்லாந்து
* பழமொழிகளைக் கவனிக்காதவன், தவறுகளைத் தவிர்க்க மாட்டான். -துருக்கி
* ஒரு பழமொழியிலிருந்து நல்லதொரு பாடத்தை மிக மலிவான விலையில் நீ காதால் வாங்கிக் கொள்கிறாய். -ஸ்விட்சர்லாந்து
* அநேக சமயங்களில் ஒரு மனிதனுடைய வாழ்வு ஒரு பழமொழியின்மேல் கட்டுப்பட்டிருக்கிறது.
-ஹீப்ரு