Author Topic: ~ பெர்ப்ளெக்ஸ் கண்ணாடி எளிதில் உடையாது ஏன்? - தெரிந்துகொள்வோம் ~  (Read 642 times)

Offline MysteRy

பெர்ப்ளெக்ஸ் கண்ணாடி எளிதில் உடையாது ஏன்? - தெரிந்துகொள்வோம்




பெர்ப்ளெக்ஸ் கண்ணாடி என்பது அங்கப் பொருளால் செய்யப்பட்டது. வழக்கமான கண்ணாடி அநங்ககப் பொருளாகிய சிலிக்கா, சோடா போன்றவற்றால் செய்யப்படுகிறது. சாதாரண கண்ணாடியைவிட பாதி எடைதான் இருந்தாலும் அதைவிட பல மடங்கு வலுவுடையது. இதை எளிதில் வளைத்து நிமிர்த்தி பல வடிவங்களில் பொருள்களைச் செய்யலாம்.

எரிசாராயம், அசிட்டோன், ஹைட்ரோ சயனிக் அமிலம், கந்தக அமிலம் முதலியவற்றைப் பயன்படுத்தி செய்கிறார்கள்.

சாதாரண கண்ணாடி வழியாக புற ஊதாக் கதிர்கள் எக்ஸ்ரே கதிர்கள் சுலபமாக நுழையும். அனல் கதிர்கள் அதன்வழியே நுழையாது. சன்னல்களுக்கு இது நல்லது. பிளெக்ஸிக் கண்ணாடியை அறுக்கலாம், வளைக்கலாம், லேத்தில் கடையலாம், தேய்த்து மழுக்கலாம், துறையிடலாம், ஒட்டலாம்.

மிகவும் மோசமான விஷப்பொருளாகிய ஹைட்ரோ சயனிக் அமிலத்தால் (ப்ரஸ்ஸிக் அமிலம்) செய்யப்பட்டாலும், கண்ணாடியாக ஆனதும் இது சுத்தமாக விஷமற்றப் பொருளாகிவிடுகிறது. பொய்ப் பற்கள் ப்ளெக்ஸிக் கண்ணாடியினால் செய்யப்படுகிறது. செயற்கை இதய வால்வுகள் கூட இதனால் செய்யப்படுகிறது.

ஏராளமான கருவிகள் செய்ய இது பயன்படுகிறது. 100 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தையும் தாங்கும். சோடா காரம், அமிலம், பெட்ரோல் போன்ற எந்த பொருளாலும் இது கெடாது. ஆனால் சாராயம், ஈத்தர், பென்ஸின் போன்ற கரைப்பான் திரவங்களில் கரைந்துவிடும். இதை எரித்தால் பயங்கரமாள வெப்பத்துடன் எரியும் எனவே ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.