Author Topic: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~  (Read 1788 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #30 on: August 18, 2014, 05:50:46 PM »
ஸ்வீட் கார்ன் மக்கானா



தேவையானவை:
ஸ்வீட் கார்ன் - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 ஸ்வீட் கார்னை குக்கரில் வேகவைக்கவும். வெங்காயம், தக்காளியை அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த வெங்காயம் - தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தயிர், கரம்மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பிறகு, வெந்த ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.