Author Topic: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~  (Read 2098 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #15 on: August 18, 2014, 11:25:54 AM »
பேபி கார்ன் - மேத்தி கிரேவி



தேவையானவை:
பேபி கார்ன் - 10, வெந்தயக்கீரை - கால் கப், முந்திரிப் பருப்பு - 5, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, சர்க்கரை அல்லது தேன் - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பேபி கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரிப் பருப்பை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, ஆறியவுடன் அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு ஏலக்காய் சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம்மசாலாத்தூள் சேர்க்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெந்தயகீரை சேர்த்து வதக்கவும். இதில் வெந்த பேபி கார்ன், சர்க்கரை (அ) தேன் சேர்க்கவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #16 on: August 18, 2014, 05:31:45 PM »
புதினா - பனீர் கிரேவி



தேவையானவை:
பனீர் - அரை கப், புதினா இலை - ஒரு கைப்பிடியளவு, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிதளவு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, சர்க்கரை - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பனீரை சிறிதளவு எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு, அரைத்த மசாலா மற்றும் உப்பு போட்டு வதக்கி, பின்னர் பனீர் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #17 on: August 18, 2014, 05:33:40 PM »
தக்காளி - உருளைக்கிழங்கு கிரேவி



தேவையானவை:
உருளைக்கிழங்கு - 2, தக்காளி - 2, சீரகம் - கால் டீஸ்பூன், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு -  தேவையான அளவு.

செய்முறை:
குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, 3 அல்லது 4 விசில் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #18 on: August 18, 2014, 05:35:17 PM »
சோயா சங்க்ஸ் வின்டலோ



தேவையானவை:
சோயா சங்க்ஸ் - அரை கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி ப்யூரி (Toamato puree-  டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன், தனியா - கால் டீஸ்பூன், மிளகு - 5, காய்ந்த மிள காய் -  ஒன்று, பட்டை - ஒரு சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - சிறிதளவு, பால் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சிறி தளவு.

செய்முறை:
தண்ணீரில் பால்,  சோயா சேர்த்து 2 நிமிடம்  கொதிக்க விடவும். பிறகு, தண்ணீரைப் பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விடாமல் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பூண்டு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்கா யத்தை வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து மேலும் வதக்கி, உப்பு மற்றும் தக்காளி ப்யூரி சேர்க்கவும். இத  னுடன் சோயா சங்க்ஸ் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கரம்மசாலா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக் கவும்.
குறிப்பு: தக்காளி ப்யூரிக்குப் பதில் ஒரு தக்காளியை விழுதாக அரைத்துச் சேர்த்தும் தயாரிக்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #19 on: August 18, 2014, 05:36:31 PM »
தால் பஞ்சரத்தன்



தேவையானவை:
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் மசூர் தால் - தலா 3 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - அரை டீஸ்பூன், நெய், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
எல்லா பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் வைத்து, 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். கடாயில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி... தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, வெந்த பருப்பை சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து... இதனுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, கொதி வந்தவுடன் கஸ¨ரி மேத்தி சேர்த்து, ஒரு நிமிடத்துக்குப் பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும். தால் பஞ்சரத்தன் ரெடி!

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #20 on: August 18, 2014, 05:37:47 PM »
பஞ்சாபி தால் ஃப்ரை



தேவையானவை:
பாசிப்பருப்பு - அரை கப், சீரகம் - கால் டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், கொத்தமல்லி  - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
குக்கரில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து மேலும் வதக்கி... சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். இதனுடன் பாசிப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, 4 விசில் வந்ததும் இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #21 on: August 18, 2014, 05:39:00 PM »
பிண்டி மிர்ச் மசாலா



தேவையானவை:
வெண்டைக்காய் - 15, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் (விழுதாக அரைக்கவும்), குடமிளகாய் - பாதி அளவு, தனியாத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு, கொத்தமல்லி - தேவையான அளவு.

செய்முறை:
வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு, வெண்டைக்காயை உப்பு சேர்த்து வதக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி... அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். பிறகு, நறுக்கிய குடமிளகாய் மற்றும் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #22 on: August 18, 2014, 05:40:13 PM »
காளான் - பட்டாணி குருமா



தேவையானவை:
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, காளான் - 8, பச்சைப் பட்டாணி - கால் கப், ஏலக்காய் - 2, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் -  ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, கொத்தமல்லி - தேவையான அளவு,

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு வதக்கவும். நன்கு ஆறியவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு ஏலக்காய் தாளித்து, காளான் மற்றும் பச்சைப் பட்டாணியை சேர்த்து... உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்). பிறகு, விழுதை சேர்த்து நன்கு கிளறிவிடவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். 2 கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #23 on: August 18, 2014, 05:41:34 PM »
காலா சன்னா மசாலா



தேவையானவை:
கறுப்பு கொண்டைக்கடலை - அரை கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 2 பல், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு நன்கு வதக்கி இஞ்சி, பூண்டு சேர்த்து அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்து வதக்கி... மிளகாய்த் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெந்த கொண்டைக்கடலையை சேர்த்து, கொஞ்சம் தண் ணீர் சேர்த்து, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். தேவைப்பட்டால், பரிமாறும்போது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #24 on: August 18, 2014, 05:42:52 PM »
பிண்டி - பாதாம் - டொமேட்டோ கிரேவி



தேவையானவை:
வெண்டைக் காய் - 15, பாதாம் - 8, வெங்காயம் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சோம்புத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், தக்காளி - 2, கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - அரை டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கவும். பாதாமை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெண்டக்காயை நன்கு வதக்கி வைக்கவும். ஏலக்காய், தோல் உரித்த பாதாம், வெங்காயம், சோம்புத்தூள் மற்றும் கஸ¨ரி மேத்தியை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். தக்காளியை தனியாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த பாதாம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி, தக்காளி விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, வதக்கி வைத்த வெண்டைக்காயை சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்  ணீர் சேர்த்து, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக் கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #25 on: August 18, 2014, 05:44:07 PM »
லக்னாவி கேப்சிகம் மசாலா



தேவையானவை:
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய குடமிளகாய் (பச்சை, சிவப்பு, மஞ்சள் - 3 நிறங்களிலும்) - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: சீரகம் - கால் டீஸ்பூன், தனியா - அரை டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, ஏலக்காய் - ஒன்று, முந்திரிப் பருப்பு - 8.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும். வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து... வதக்கிய வெங்கா யம், தக்காளி மற்றும் இஞ்சி - பூண்டு விழுதுசேர்த்து நன் றாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அரைத்த மசாலாவை போட்டு வதக்கி, மிளகாய்த் தூள், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து, நறுக்கிய குடமிளகாய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, 5 நிமிடத்துக்குப் பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #26 on: August 18, 2014, 05:45:24 PM »
வெஜிடபிள் ஜால்ஃப்ரசி



தேவையானவை:
கேரட், குடமிளகாய், காளான், பச்சைப் பட்டாணி, பேபி கார்ன் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, முந்திரிப் பருப்பு - 6, ஃப்ரெஷ் க்ரீம் அல்லது திக்கான பால்  - கால் கப், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கி தனியே வைக்கவும். காளான் உள்ளிட்ட காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு அரை வேக்காடு பதத்தில் வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை நன்கு வதக்கி அரைத்துக்கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு, அரைத்த விழுதை சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும்.
முந்திரி பருப்பை நன்கு அரைத்து இதில் சேர்த்து கலக்கி... வெந்த காய்கறிகளை சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்த்து, நறுக்கிய குடமிளகாயை சேர்த்துக் கிளறி... சிறிதளவு தண்  ணீர் சேர்க்கவும் கடைசியாக, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, ஒரு கொதி வந்த  வுடன் இறக்கி, சப்பாத்தியுடன் பரிமாற வும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #27 on: August 18, 2014, 05:46:35 PM »
பாசிப்பருப்பு தடுக்கா



தேவையானவை:
பாசிப்பாருப்பு - அரை கப், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, பூண்டு - 8 பல், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்புடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் போட்டு 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு... கடுகு, சீரகம் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். பிறகு, வெந்த பருப்பைச் சேர்த்து, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 2 கொதி விட்டு இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #28 on: August 18, 2014, 05:47:54 PM »
செட்டிநாடு தக்காளி குருமா



தேவையானவை:
வெங்காயம் - ஒன்று, தக்காளி - 3, பிரிஞ்சி இலை - ஒன்று, கல்பாசி (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - சிறிதளவு, சீரகம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - அரை டேபிள்ஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானவுடன் சீரகம், பிரிஞ்சி இலை, கல்பாசி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளிக்கவும். பொடி யாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து மேலும் வதக்கி, மிளகாய்த்துள், உப்பு சேர்க்கவும். பிறகு, அரைத்த மசாலாவை சேர்த்து 2 கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சுவையான செட்டிநாடு தக்காளி குருமா தயார்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #29 on: August 18, 2014, 05:49:11 PM »
டோஃபு தவா மசாலா



தேவையானவை:
டோஃபு  க்யூப்ஸ் (சோயா பனீர்) - ஒரு கப், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட் டிகை, சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், ஓமம், சீரகம் -  தலா கால் டீஸ்பூன், வெங்காயம் - 2, பூண்டு - 2 பல், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி ஃப்யூரி (Toamato puree -  டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) -  அரை கப், ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன், கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி -  சிறித ளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
டோஃபுவுடன்  மஞ்சள்தூள், கஸ¨ரி மேத்தி மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து, நன்கு கலந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். நான்-ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு டோஃபு கலவையை பொன்னிறமாக வதக்கி தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு ஓமம், சீரகம் தாளித்து, பூண்டை தட்டிப் போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி... தனியாத்தூள், தக்காளி ப்யூரி சேர்க்கவும். பின்னர் வதக்கிய டோஃபு கலவையை போட்டு, கரம் மசாலாத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். கடைசியாக ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கி வைக்கவும். டோஃபு தவா மசாலா தயார்.
தக்காளி ஃப்யூரிக்கு பதில் 2 தக்காளியை விழுதாக அரைத்துச் சேர்த்தும் தயாரிக்கலாம்.