Author Topic: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~  (Read 2105 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


சப்பாத்தி என்றால் குருமா, பூரி என்றால் உருளைக்கிழங்கு மசாலா என்றே அறிந்திருப்பவர் களுக்கு, பெரிய ஹோட்டலுக்கு செல்லும்போது, மெனு கார்டில் இருக்கும் டிஷ்களின் பெயர்களைப் பார்த்து, 'இத்தனை அயிட்டங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது?’, 'இத்தனையும் எப்படி செய்வார்கள்?’ என்ற மலைப்பும் ஆச்சர்யமும் ஏற்படும். ஆனால், ''இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. உங்கள் வீட்டிலும் இவற்றை செய்து பரிமாறலாம். நான் சொல்லித் தருகிறேன் வாருங்கள்'' அன்புடன் என்று அழைப்புவிடுக்கிறார் சமையல்கலை நிபுணர் ஜெயஷ்ரி சுரேஷ். இவர், 'ஜெயஷ்ரிஸ் கிச்சன்’ என்ற பெயரில் ஒரு வலைதளம் வைத்திருப்பவர். இந்த இணைப்பிதழில் இவர், சப்பாத்தி, நாண், பரோட்டா, பூரிக்கு தொட்டுக்கொள்ள 30 வகை தால், கிரேவி, சப்ஜி வகைகளை உங்களுக்காக தயாரித்து வழங்குகிறார்.



''கொஞ்சம் ஆர்வமும், கவனமும் இருந்தால் போதும்... இந்த டிஷ்களை எல்லாம் சிறப்பாக செய்து பரிமாறி... வீட்டிலும், உறவு, நட்பு வட்டத்திலும் கிச்சன் குயினாக வலம் வரலாம்'' என்று உற்சாகப்படுத்துகிறார் ஜெயஷ்ரி.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #1 on: August 18, 2014, 11:02:37 AM »
பட்டாணி க்ரீன் மசாலா



தேவையானவை:
பச்சைப் பட்டாணி - ஒரு கப், வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, பச்சை மிளகாய் - 3, முந்திரிப் பருப்பு - 5, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 2 சிட்டிகை, பூண்டு - 2 பல், பால் - அரை கப், கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பச்சைப் பட்டாணியை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி அரைத்துக்கொள்ளவும். முந்திரிப் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து தயிருடன் சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு, அரைத்த விழுதுகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, பால் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீரும் சேர்க்கவும். இதில் வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கஸ¨ரி மேத்தி சேர்த்து, சூடாகப் பரி மாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #2 on: August 18, 2014, 11:04:04 AM »
நவரத்ன குருமா



தேவையானவை:
மிக்ஸ்ட் காய்கறிகள் (நறுக்கிய காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ் மற்றும் பச்சைப் பட்டாணி) - ஒன்றரை கப், முந்திரிப் பருப்பு - 15, உலர் திராட்சை - 7, தக்காளி,  வெங்காயம் - தலா 2, குடமிளகாய் - ஒன்று, பூண்டு - 3 பல், பனீர் க்யூப்ஸ் - 7, தனியாத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - 2 சிட்டிகை, அன்னாசிப்பழத் துண்டுகள் (விரும்பினால்) - ஒரு டேபிள்ஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காய்கறிகளை (அன்னாசி பழத் தையும் சேர்க்கலாம்) சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண் ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு  மற்றும் பாதியளவு முந்திரியை வதக்கி, தக்காளியுடன் சேர்த்து அரைக்கவும். மீதம் உள்ள முந்திரியையும், உலர் திராட்சையையும் எண்ணெயில் வறுத்து, நறுக்கிய குடமிளகாய் மற்றும் பனீர் சேர்த்து சிறிது நேரம் வதக்க வும். இதனுடன் வெந்த காய்கறிகளை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத் தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீரும் சேர்க்கவும். இதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, கஸ¨ரி மேத்தி, குங்குமப்பூ சேர்த்து, 2 நிமிடத்துக்குப் பிறகு அடுப்பை அணைக்கவும். நவரத்ன குருமா ரெடி!

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #3 on: August 18, 2014, 11:05:33 AM »
பேபி கார்ன் மசாலா



தேவையானவை:
பேபி கார்ன் - 15, வெங்காயம் - 2, குடமிளகாய் - ஒன்று, தக்காளி - 2 (பெரியது), முந்திரிப் பருப்பு - 5, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - கால் டீஸ்பூன், தக்காளி சாஸ் - கால்  டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு சிட்டிகை, பால் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பேபி கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, மற்றும் பாதி குடமிளகாயை எண்ணெயில் வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத் தூள், கஸ¨ரி மேத்தி, தக்காளி சாஸ், கரம்மசாலாத்தூள், உப்பு, முந்திரிப் பருப்பு சேர்த்து  அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, அரைத்த மசாலாவை சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, பால் சேர்த்து, வெந்த பேபி கார்னை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிடவும். மீதம் உள்ள பாதி குடமிளகாயை துண்டுகளாக நறுக்கிச் சேர்த்துக் கிளறவும். சூடாகப் பரிமாறவும்.
« Last Edit: August 18, 2014, 11:09:01 AM by MysteRy »

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #4 on: August 18, 2014, 11:06:50 AM »
பனீர் கோலாபுரி



தேவையானவை:
பனீர் க்யூப்ஸ் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2 (விழுதாக அரைக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், கொப்பரைத் துண்டுகள் - 4 டீஸ்பூன், மிளகு - 5, சோம்பு - அரை டீஸ்பூன், வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, கிராம்பு - 2, முந்திரிப் பருப்பு - 4, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் (தேவைபட்டால்) - சிறிதளவு, தனியா - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் கடாயில் வெள்ளை எள், கொப்பரை, சோம்பு, மிளகு, தனியா, ஏலக்காய், கிராம்பு, முந்திரிப் பருப்பு சேர்த்து வறுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்த மசாலா மற்றும் அரைத்த தக்காளியை இதில் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும். பிறகு, மிளகாய்தூள், தனியாத்தூள், உப்பு  சேர்த்து, பனீர் துண்டுகளையும் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால்) கரம்மசாலாத்தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
« Last Edit: August 18, 2014, 11:10:54 AM by MysteRy »

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #5 on: August 18, 2014, 11:12:11 AM »
சோலே மசாலா



தேவையானவை:
வெள்ளைக் கொண்டைக்கடலை - அரை கப், டீ பேக் (tமீணீ தீணீரீ) - ஒன்று, ஏலக்காய் - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, சீரகம் - கால் டீஸ்பூன், உலர்ந்த மாதுளை விதைப் பொடி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, டீ பேக் மற்றும் ஏலக்காய் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். டீ பேக் மற்றும் ஏலக்காயை தூக்கி போட்டுவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி... உப்பு, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்க்கவும். தக்காளியை அரைத்து சேர்த்து, உலர்ந்த மாதுளை பொடியை சேர்க்கவும். பிறகு, வெந்த கொண்டைக்கடலையை சேர்க்கவும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #6 on: August 18, 2014, 11:13:24 AM »
பப்பட் சப்ஜி



தேவையானவை:
மிளகு அப்பளம் - 2, தயிர் - அரை கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள் - தலா கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் - சிறிதளவு,  கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தயிரைச் சேர்த்து... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, தயிர் கலவையை சேர்க்கவும். அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 5 நிமிடம் கிளறவும். நான்காக நறுக்கிய மிளகு அப்பளத்தை சேர்க்கவும்.  தேவைப்பட்டால் சிறிது தண்ணீர்    சேர்த்து, 3 நிமிடம் மெல்லிய தீயில் வைத்து அடுப்பை அணைக் கவும். கொத்தமல்லி தூவி பரிமாற வும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #7 on: August 18, 2014, 11:14:42 AM »
வெள்ளரிக்காய் மசாலா



தேவையானவை:
வெள்ளரிக்காய் - ஒன்று, சின்ன வெங்காயம் - 5, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், தனியா - அரை டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, பூண்டு - 3 பல், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு,  எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெள்ளரிக்காயைத் தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் பட்டை சேர்த்து நன்கு வதக்கி, விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயைக் கடாயில் விட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த விழுதை சேர்த்து மேலும் வதக்கி, நறுக்கிய வெள்ளரிக்காயைச் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #8 on: August 18, 2014, 11:16:13 AM »
முட்டைகோஸ் கோஃப்தா கிரேவி



தேவையானவை:
முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது) - 2 கப், பனீர் துருவல் - ஒரு கப், கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன், தக்காளி - 2 (விழுதாக அரைக்கவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் (கோஃப்தாவுக்கு), கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்கா யம் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (கிரேவிக்கு), தக்காளி கெச்சப் - ஒரு டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 2 சிட்டிகை, பூண்டு - 3 பல், பால் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, 

செய்முறை:
முட்டைகோஸை நறுக்கி, உப்பு சேர்த்து 10 நிமிடம் வைத்திருந்து, நன்கு பிழிந்து தண்ணீரை எடுக்கவும். பனீர், மிளகாய்த்தூள், கடலை மாவு மற்றும் அரை டீஸ்பூன் கரம்மசாலாத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, முட்டைகோஸ்உடன் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதுதான் கோஃப்தா.
கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி கெச்சப், மிளகாய்த்தூள், கஸ¨ரி மேத்தி  சேர்த்து நன்கு அரைக்கவும். கடாயில் தக்காளி விழுது, அரைத்து வைத்த வெங்காயம் - பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பால் சேர்க்கவும். அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். இதுதான் கிரேவி. பொரித்த கோஃப்தா நன்கு ஆறியதும், கிரேவியில் சேர்த்து பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #9 on: August 18, 2014, 11:17:27 AM »
சன்னா பாலக்



தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை - அரை கப், பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு, வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு சிட்டிகை, சர்க்கரை, சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
கொண்டைக் கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். பாலக்கீரையை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும். பச்சை மிளகாயுடன் கீரையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளியை விழுதாக அரைத்து சேர்த்து... உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, அரைத்த கீரை விழுதை சேர்க்கவும். இதனுடன் வெந்த கொண்டைக்கடலையை சேர்க்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்). இதனை 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கஸ¨ரி மேத்தி சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #10 on: August 18, 2014, 11:19:09 AM »
காலிஃப்ளவர் மகானி



தேவையானவை:
காலிஃப்ளவர் - ஒரு சிறிய பூ, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, முந்திரிப் பருப்பு - 5, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காலிஃப்ளவரை வெந்நீரில் 2 நிமிடம் போட்டு தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரிப் பருப்பை பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு, வெந்த காலிஃப்ளவரை சேர்க்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #11 on: August 18, 2014, 11:20:27 AM »
முள்ளங்கி மசாலா



தேவையானவை:
முள்ளங்கி - 2 (சிறியது), வெங்காயம் - ஒன்று,  தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் - சிறிதளவு, பட்டை - ஒரு சிறிய துண்டு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பட்டை தாளித்து, நறுக்கிய வெங்கா யத்தை சேர்த்து வதக்கவும். நறுக்கிய முள்ளங்கியையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, கொஞ்சம் தண் ணீர் விட்டு வேகவைக்கவும். தேங் காய்த் துருவல், இஞ்சி, கொத்த மல்லி, பொட்டுக்கடலை மற்றும் பச்சை மிளகாயை அரைத்து, இந்த விழுதை முள்ளங்கியுடன் சேர்த்து வதக்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்). பிறகு, உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதித்த வுடன் அடுப்பை அணைக்கவும். முள்ளங்கி மசாலா தயார்!

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #12 on: August 18, 2014, 11:21:52 AM »
ஷாஹி பொட்டேட்டோ குருமா



தேவையானவை:
உருளைக்கிழங்கு - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, முந்திரிப் பருப்பு - 5, ஏலக்காய் - ஒன்று,  பட்டை - ஒரு சிறிய துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், கல்பாசி (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 2 பல், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கெட்டித் தயிர் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
குக்கரில் எண்ணெய் விட்டு, நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கவும். தேங்காய், சோம்பு, பட்டை, இஞ்சி, பூண்டு, ஏலக்காய், கல்பாசி, காய்ந்த மிளகாய், முந்திரிப்பருப்பு சேர்த்து நன்கு அரைத்து குக்கரில் சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கி... தயிர் சேர்க்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். தேவையான தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, 3 விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #13 on: August 18, 2014, 11:23:15 AM »
கேரட் - காளான் சப்ஜி



தேவையானவை:
நறுக்கிய கேரட், குடமிளகாய், காளான், பேபி கார்ன் மற்றும் பச்சைப் பட்டாணி, (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், தனியா - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, ஏலக்காய் - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, தக்காளி ப்யூரி (ஜிஷீணீனீணீtஷீ ஜீuக்ஷீமீமீ - டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் கப், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத் தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - கால் டீஸ்பூன், ஃப்ரெஷ்  க்ரீம் - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காய்கறிகளை அரை வேக்காடு பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். தனியா, மிளகாய் மற்றும் ஏலக்காயை வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து   வதக்கி... தக்காளி ப்யூரியை சேர்க்கவும். இதனுடன் அரைத்து வைத்த பொடி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, காய்கறிகளைச் சேர்த்துக் கிளறி, சிறிதளவு தண்ணீர் விட்டு, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, ஒரு கொதி விட்டு, கஸ¨ரி மேத்தி சேர்த்து இறக்கவும்.
தக்காளி ப்யூரிக்குப் பதில், ஒரு பெரிய தக்காளியை விழுதாக அரைத்துச் சேர்த்தும் தயாரிக்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தால் - கிரேவி - சப்ஜி! ~
« Reply #14 on: August 18, 2014, 11:24:36 AM »
மசூர் - கேரட் தால்



தேவையானவை:
மசூர் தால் - கால் கப், கேரட், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பூண்டு - 2 பல், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் அல்லது நெய் - அரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:
மசூர் தாலுடன் நறுக்கிய வெங்காயம், கேரட் தக்காளி, மற்றும் பூண்டு சேர்த்து... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு குக்கரில் வைத்து 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கி, பிறகு நன்கு மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் (அ) நெய் சேர்த்து கடுகு, கறிவேப்பில்லை, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வெந்த பருப்பை சேர்த்து, கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கிவிடவும். பரிமாறும் முன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.