Author Topic: ~ அவல் - ஜவ்வரிசி சர்க்கரைப் பொங்கல் ~  (Read 527 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அவல் - ஜவ்வரிசி சர்க்கரைப் பொங்கல்



தேவையானவை:
கெட்டி அவல் - 100 கிராம், ஜவ்வரிசி - 50 கிராம், முந்திரி - 10, ஏலக்காய் - 5, பாகு வெல்லம் - 100 கிராம், நெய் - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். ஏலக்காயையும் தனியாக வறுத்து எடுத்து பொடி செய்யவும். அவலையும், ஜவ்வரிசியையும் முந்திரி வறுத்த நெய்யிலேயே லேசாக வறுத்து எடுக்கவும். அவல், ஜவ்வரிசியுடன், அவை வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து, 2 விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பை பற்றவைத்து, வெல்லத்தைப் போட்டு கரையும் வரை வைத்து எடுத்து வடிகட்டவும். இதை வாணலியில் மீண்டும் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். வேகவைத்த அவல், ஜவ்வரிசி கலவையை வெல்லப்பாகில் போட்டு நன்கு கிளறவும். நெய்விட்டு மேலும் கிளறவும். இதனுடன் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும். தேவைப்பட்டால், சிறிதளவு கேசரி பவுடரை பாலில் கலந்து சேர்க்கலாம்.
இந்தப் பொங்கலை சூடாக சாப்பிட வேண்டும்.... சுவை ஆளை அசத்தும்.