Author Topic: ~ மஷ்ரூம் - பெப்பர் பாத் ~  (Read 471 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மஷ்ரூம் - பெப்பர் பாத்



தேவையானவை:
 பாஸ்மதி அரிசி - ஒரு கப், மஷ்ரூம் - ஒரு பாக்கெட், தேங்காய்ப் பால் - அரை கப், தண்ணீர் - ஒரு கப், மிளகு, சீரகம் - தலா ஒன்றரை டீஸ்பூன், நெய் - 5 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
மஷ்ரூமை சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ளவும். கடாயில் இரண்டு டீஸ்பூன் நெய்விட்டு, மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடி செய்யவும். மீதியுள்ள நெய்யை கடாயில் விட்டு, எண்ணெயும் சேர்த்து அதில் மஷ்ரூமை வதக்கவும். அதனுடன் மிளகு - சீரகப் பொடியை சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்த்து, தேங்காய்ப் பாலை ஊற்றி, லேசாக சூடேறியவுடன் அடுப்பை அணைக்கவும். பாஸ்மதி அரிசியைக் கழுவி, தேங்காய் பால் கலவை, ஒரு கப் நீர் சேர்த்து குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி, நன்கு கிளறி பரிமாறவும்.