Author Topic: !!!ஓசையில்லா மொழி!!!  (Read 1658 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
!!!ஓசையில்லா மொழி!!!
« on: December 08, 2011, 06:31:15 AM »
    உதடுகளை அசைத்தேன்
    ஓசை இல்லை..
    "ஊமை" புதுப் பெயர் சூடினேன்...
    ஓசையில்லா மொழி என் மொழி

    மொழி இல்லாததால்
    உணர்வுகளும்
    ஊமையாகியாதோ....

    பலரின் சலிப்பும்
    சிலரின் பரிதாப பார்வையும்
    ஊனத்தையும் ஊமையாக்கியதே....
    என் ஓசையில்லா மொழியை
    உணருவர் எவரோ

    ஒரு முறையேனும்
    என் குரல் ஒலிக்காதா??
    உன் மன ஏக்கத்தை
    பார்வையால் உணர்த்த
    மௌனமொழி பரிட்சயமானதால்
    ஏக்கத்தை உணர்ந்து
    "அம்மா" உன்னை எனக்கு பிடிக்கும்..
    நீ இல்லாமல் நான் இல்லை"
    என் கடைசிக் கதறல்....
    ஓசையில்லா என் மொழியை
    உணராமலே என்னை பிரிந்தாய்..

    ஓசையில்லா என் மொழியை
    உன் மரண படுக்கையில்
    உணர்த்த முடியாத
    ஊமையானேன்..

    நிஜமாய் உன்னை பிரிந்த
    அன்றுதான் ஊமையே ஆனேன்..
    என் ஓசையில்லா மொழியை
    உணருவர் எவரோ???

[/size][/color][/b]


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: !!!ஓசையில்லா மொழி!!!
« Reply #1 on: December 08, 2011, 11:50:54 PM »
ஊமையாய் இருப்பது எவளவோ மேல் .... வாய் பேச முடியாது என்பதை தவிர வேறு வலிகள் தெரியாது ...

நல்ல கவிதை ஸ்ருதி 
                    

Offline RemO

Re: !!!ஓசையில்லா மொழி!!!
« Reply #2 on: December 11, 2011, 07:16:08 PM »
nice shur