பழமொழிகள்...

* அரசனை நம்பி புருசனை கைவிடாதே
* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
* அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
* அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
* அறச் செட்டு முழு நட்டம் .
* அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
* அறமுறுக்கினால் அற்றும் போகும்
* அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
* அறிய அறியக் கெடுவார் உண்டா?
* அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
* அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
* அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
* அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்
* அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
* அற்ப அறிவு அல்லற் கிடம்.
* அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
* அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
* அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
* அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
* அழுத பிள்ளை பால் குடிக்கும்
* அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
* ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.