காத்திருப்பது சுகமானது
காத்திருந்தால்
காலமும் கனியும் காதலும் கனியும்
காத்திருப்பு உலக நியதி
காத்திருப்பது காலத்தின் கட்டாயம்
இதில்
ஆணும் பெண்ணும் விதிவிலக்கல்ல
இரவு பகலுக்காக
காத்திருக்கிறது
பகல் இரவுக்காக
காத்திருக்கிறது
வாழ்க்கை மரணத்துக்காக
காத்திருக்கிறது
மரணம் வாழ்க்கைக்காக
காத்திருக்கிறது
காத்திருக்கும் விதை
மரமாகிறது
காத்திக்கும் காய்
கனியாகிறது
நாம் எல்லோரும்
யாருக்காகவோ எதற்காகவோ
காத்திருக்கிறோம்
வாழ்க்கை என்பதின் அடிப்படையே
காத்திருத்தல் தான்
இறந்த பிறகும் என்விழிகள்
திறந்தே இருக்கின்றன
உனக்காக கண்மூடாமல்
காத்திருந்த பழக்கம் தான்