நீ சிறிய விதை தான்
ஆனால்
உன்னுள் ஒளிந்திருக்கிறது
பிரமாண்டமான மரம்
வெளிப்பாடு
உன்னை மூடிய மண்ணை பிளந்து
புறப்பட்டு
எங்கெல்லாம் நீர் உண்டோ
அங்கெல்லாம்
உன் வேர்கள் நீளட்டும்
தேடலே உன் வேர்கள்
உன் தாகமே உன் வேர்களுக்கு
வழிகாட்டி
பாறைகளை பிளந்து செல்லும்
சக்தி
உன் வேர்களுக்கு உண்டு
ஆழங்களில் இறங்கு நீ
எத்தனை ஆழமாக இறங்குகிராயோ
அத்தனை உயரமாக வளர்வாய்
உன் வேர்களுக்கு
பூமியும் எல்லை இல்லை
உன் கிளைகளுக்கு
வானமும் எல்லை இல்லை
உன் தாகம் அதிகரிக்கட்டும்
உன் தேடல்களும் தொடரட்டும்