Author Topic: ~ புண்கள் ஆற பாட்டி வைத்தியம்:- ~  (Read 587 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227472
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புண்கள் ஆற பாட்டி வைத்தியம்:-




பொடுதலைக் கீரையை அரைத்து, ஆசனவாய்க் கட்டிகள் மீது கட்டினால், அவை பழுத்து உடைந்து குணமாகும். மேலும் புண், அக்கிப்புண், நெறிக்கட்டி போன்றவற்றின் மீது பூசினால் குணம் பெறலாம்.

துத்திக் கீரையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் கலந்து புண்கள் மீது தடவினால், அவை விரைவில் ஆறும்.

ஆரைக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாகக் காய்ச்சி ஆறாத புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.

பண்ணைக் கீரையை அரைத்துச் சாறு எடுத்து, புண்கள் மீது தடவினால் அவை குணமாகும்.