Author Topic: ~ நான்ஸ்டிக் பராமரிப்பு! ~  (Read 414 times)

Offline MysteRy

நான்ஸ்டிக் பராமரிப்பு!



நான்-ஸ்டிக் பாத்திரங்களை இப்போது பலரும் விரும்பி வாங்கி உபயோகிக்கின்றனர். அவற்றை மிக ஜாக்கிரதையாக பராமரித்து வந்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். மிதமான தீயிலே அந்தப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். நன்றாகத் தீயை எரியவிட்டு விட்டு அதில் வெறும் பாத்திரங்களை ஒரு போதும் வைக்கக்கூடாது.
பாத்திரங்களை மிருதுவான துணி கொண்டோ, ஸ்பான்ச் கொண்டோ துடைக்க வேண்டும். உபயோகிக்கும் முன்பும், உபயோகித்த பின்பும் பாத்திரங்களைத் துடைத்துக் கொள்வது அவசியம். நான்-ஸ்டிக் பாத்திரங்களில் ஸ்டீல், இரும்பு கரண்டிகளைப் பயன்படுத்தக் கூடாது. மர அகப்பை அல்லது பிளாஸ்டிக் கரண்டிகளைப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு முறை உபயோகப்படுத்திய பின்பும் சோப் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும். இது எண்ணெய் பிசுக்கு சேருவதைத் தடுக்கும். அதிக எண்ணெய்க் கறை சேர்ந்து விடாமல் பாத்திரத்தை சோப் நீர் கொண்டு நிரப்பி 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு சுத்தம் செய்து துடைத்துக் காய வைக்கவும்.
ஒவ்வொரு முறையும் உபயோகப்படுத்தும் போதும், உபயோகப்படுத்துவதற்கு முன்னும் சமையல் எண்ணெய் கொண்டு தடவ வேண்டும். சபினா போன்ற கரகரப்பான பவுடரை உபயோகப்படுத்தக் கூடாது.