Author Topic: ~ நடுத்தர மக்களை மகிழ்வித்த வருமான வரிச் சலுகைகள்..! ~  (Read 788 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226540
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நடுத்தர மக்களை மகிழ்வித்த வருமான வரிச் சலுகைகள்..!



மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்த 2014-15ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு அதிக வருமான வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு என்னென்ன வருமான வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன என்பதை சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் பெ.பாபு விளக்கிச் சொன்னார்.

''வருமான வரி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில், 60 வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கான அடிப்படை வருமான வரி உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வரி வரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களுக்கான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை.

அடிப்படை வரம்பு அதிகரிக்கப் பட்ட வகையில் ரூ.5,000 வரை வரி மிச்சமாகும். கடந்த ஆண்டு (2013-14) வரை 5 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு, வரித் தள்ளுபடி ரூ.2.000 அளிக்கப்பட்டது. அது இந்த ஆண்டும் தொடர்கிறது.



கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.1 லட்சம் ரூபாயாக இருந்த, வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் முதலீடு மற்றும் செலவுக்கான வரி விலக்கு வரம்பு, ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டி ருக்கிறது.

இது நடுத்தர மக்களுக்கு வருமான வரியை கணிசமாகச் சேமிக்க உதவும். அதாவது, பிஎஃப், பிபிஎஃப், லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், இஎல்எஸ்எஸ் ஃபண்ட் முதலீடு உள்ளிட்டவைகளில் அதிக முதலீட்டை செய்வது மூலம் வரிச் சேமிப்பை அதிகரிக்க முடியும்.

தற்போது பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்டில் (பிபிஎஃப்) ஓராண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின் கீழ் விதிமுறைக்கு உட்பட்டு, நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரையில் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த உச்சவரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

பிபிஎஃப்-ல் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமானப் பெருக்கம், முதிர்வுத் தொகைக்கு வரி கிடையாது. ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாயை பிபிஎஃப்-ல் ஒருவர் போட்டுவந்தால், 20 ஆண்டுகள் கழித்து சுமார் 80 லட்சம் கிடைக்கும். இந்தத் தொகைக்கு வரி எதுவும் கிடையாது என்பது மிகவும் லாபகரமான விஷயம். வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் வட்டிக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது'' என்றவர், மத்திய பட்ஜெட்டில் சம்பளக்காரர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மொத்தச் சலுகை என்ன என்பதையும் குறிப்பிட்டார்.



''அடிப்படை வருமான வரி வரம்பில் ரூ.50,000 உயர்வு, வீட்டுக் கடன் வட்டியில் வரிச் சலுகை ரூ.50,000, பிபிஎஃப் முதலீட்டு வரம்பில் ரூ.50,000 உயர்வு என ஆக மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் இந்த பட்ஜெட்டில் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் ஒருவர் இந்த மூன்று சலுகைகளையும் பயன்படுத்தும்பட்சத்தில் ரூ.5,000 முதல் அதிகபட்சம் ரூ.35,000 வருமான வரியை மிச்சப்படுத்த முடியும்.
எதிர்பார்த்த அளவுக்கு வருமான வரியில் அதிகச் சலுகைகள் கிடைக்கவில்லை என்றாலும் முடிந்தவரை சில சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.