தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1 நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
பூண்டு - 3 நசுக்கியது
தந்தூரி மசாலா
தனியா தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வெஜ். மட்டன் - 50 கிராம்
மஸ்ரூம் - 50 கிராம்
எண்ணெய் - 50 மி.லி
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
புதினா, கொத்தமல்லி, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
பட்டை, மிளகு, கிராம்பு, ஏலக்காய், சோம்பு - 10 கிராம் (பொடி)
செய்முறை
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடான பிறகு பொடி செய்த பவுடர் போட்டு, மிளகு, இஞ்சி, பூண்டு இதையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் மேலே குறிப்பிட்டுள்ள மசாலா அனைத்தையும் போட்டு நன்றாக கிளறவும். பின்பு வெஜ். மட்டன், மஸ்ரூம் இவைகளை போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பின்பு புதினா, கொத்தமல்லியை மேலே தூவி இறக்கினால் சுவையான வெஜ். மட்டன் மஸ்ரூம் மசாலா ரெடி.