Author Topic: ~ பொன்மொழிகள் :- ~  (Read 740 times)

Offline MysteRy

~ பொன்மொழிகள் :- ~
« on: July 17, 2014, 08:44:31 PM »
பொன்மொழிகள் :-




ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்; பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்.

மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்.

அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழ வேண்டும்.

உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்.

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.

மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல - விவேகானந்தர்.

Offline MysteRy

Re: ~ பொன்மொழிகள் :- ~
« Reply #1 on: August 02, 2014, 07:51:22 PM »
பொன்மொழிகள் :-




1. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை. -ஹெலன் கெல்லர்.

2. நாம் செய்யும் சேவை கடலின் ஒரு துளி போன்றதுதான். ஆனால் அதை நாம் செய்யாவிட்டால் கடலில் ஒரு துளி குறைந்துவிடும் அல்லவா? -அன்னை தெரசா.

3. மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடையமுடியும்.
-அம்பேத்கர்.

4. வீரன் ஒரு முறைதான் சாகிறான். கோழை ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டேயிருக்கிறான். -ஷேக்ஸ்பியர்.

5. கல்வியின் வேரானது கசக்கும். ஆனால் அதன் விளைச்சல் இனிக்கும். -அரிஸ்டாட்டில்.

6. சோம்பல் மாவீரனையும் வீழ்த்திவிடும். - பார்ட்டன்.

7. பழிவாங்குதல் வீரமன்று. ஆனால் பொறுப்பதே வீரம். - ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

8. ஊக்கத்தைக் கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு. -அண்ணா.

9. கோபத்தைக் கொன்று விடு. இல்லையேல் அது உன்னைக் கொன்றுவிடும். -குருநானக்.

10. உயர்ந்த எண்ணங்களை உடையார் ஒரு நாளும் துன்பம் அடையார். - காந்தியடிகள்.

Offline MysteRy

Re: ~ பொன்மொழிகள் :- ~
« Reply #2 on: August 15, 2014, 08:32:41 PM »
பொன்மொழிகள்...




* புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி.

* கருமியின் நெஞ்சம் சாத்தானின் இருப்பிடம் .

* நோய் வரும்வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டிவரும்.

* அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது.

* நன்றி மறத்தலில் எல்லா கெட்ட குணங்களும் அடங்கும்.

* முட்டாள் தனக்கே முகஸ்துதி செய்துகொள்வான்.

* நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை உண்டாக்கும்.முடிவில் வெறுப்பை வளர்க்கும்.

* நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைப்பது ஞானம்.
நம்மைத்தவிர எதுவும் இல்லை என்று நினைப்பது ஆணவம்.

* முதல் குற்றத்தை சரி என்று சாதிப்பவன்
இரண்டாவது குற்றத்தையும் செய்தவனாகிறான்.

* அன்பில்லாத இடத்தில் முகங்கள் வெறும் படங்கள்;பேச்சுக்கள் வெறும் கிண்கிணி ஓசைகள்.

* முட்டையைக் கொடுத்து காசு வாங்குபவன் வியாபாரி.
காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி.
எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.

* எப்படியும் செய்ய வேண்டிய ஒரு செயலை புன்முறுவலுடன் செய்வதற்குப் பெயர்தான் ஒத்துழைப்பு.