உலகின் எவ்வகை
வண்டினமும்
வந்தமரா வசீகர
மலரிதழ்கள்
நானறிந்தவரை
நின் மொட்டிதழ்களே !
======
வரிகளோட ஆழத்தை கருத்தில் வைக்கும் போது, எவ்வகை வண்டினமும்'னு, அப்படி பொதுப்படையா சொல்லிட முடியாது போலிருக்கே, நிதம் கவியின் விழி வண்டுகள் மொட்டு மலரும் தருணம் வரை தண்னென இருந்து அமுதருந்தி அமரனாயிருக்கும் போலிருக்கே..!!!
சுந்தர வரிகளில் சுந்திரியின் மீதான வர்ணனைகள்.. அபாரமாயிருக்கிறது நண்பரே..
உங்கள் கவிரசத்தினை இன்னும் அதிகமாய் பருக ஆவலாயிருக்கிறது..
எதிர்பார்ப்புகளுடன்
தோழன்
சசிகுமார்