திருமணம் பற்றிய பழமொழிகள்...* திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொள்; திருமணம் ஆனபின் ஒன்றை மூடிக்கொள்.
- அமெரிக்கா
* மணவாழ்க்கை என்பது இரும்புக் கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.
- அரேபியா
* மனைவி - வீட்டின் ஆபரணம் - இந்தியா
* கெட்டிக்காரப் பெண் - தான் காதலிப்பவனை விட்டு விட்டுத் தன்னை காதலிப்பவனைத்தான் மணப்பாள்.
- செக்கோஸ்லோவேகியா
* திருமணம் செய்து கொள்ளும் முன்பும், கோர்ட்டுக்குச் செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.
- டென்மார்க்
* திருமணத்துக்குப் பெண்ணை நாடும்போது கண்களை மூடிக் கொண்டு கடவுளை தியானம் செய்.
- வேல்ஸ்
அ* ழுது கொண்டே வரும் மணமகள், சிரித்து கொண்டிருக்கும் மனைவியாகிறாள்.
- ஜெர்மனி
* பணத்திற்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம்; பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்!
- ஐரோப்பா
* திருமணம் என்பது - மூடிய தட்டிலிருக்கும் உணவு போன்றது
- ஸ்காட்லாந்து
* மணம் செய்யும் போதும், மாத்திரை சாப்பிடும்போதும் மிக அதிகமாகச் சிந்திக்கக் கூடாது.
- ஹாலந்து
* கணவனின் அன்பே, பெண்ணிற்குப் பொக்கிஷம்
- தமிழ் நாடு
* இரு இதயங்களும் ஒன்றானால் வைக்கோல் தொட்டி கூட அரண்மனையாகும்!
- இலங்கை