Author Topic: சிக்கன் சமோசா  (Read 1440 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
சிக்கன் சமோசா
« on: December 05, 2011, 07:12:04 AM »
தேவையானவை

    மசாலாவிற்கு:-
    சிக்கன் - அரை கிலோ
    வெங்காயம்-4
    தக்காளி -2
    கொத்தமல்லி - சிறிதளவு
    பட்டை,ஏலக்காய்,லவங்கம் -பொடித்தது கால் ஸ்பூன்
    இஞ்சி பூடு விழுது -2 ஸ்பூன்
    தனியா -1 1/2 ஸ்பூன்
    பச்சைமிளகாய் -1
    சீரகத்தூள்-1/2 ஸ்பூன்
    மிளகுத்தூள் -1/2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - கால் ஸ்பூன் அல்லது காரத்திற்கு ஏற்ப
    உப்பு - தேவைக்கு
    சமோசா மாவிற்கு:-
    மைதா- 1 கப்
    தேங்காய் பால் - 1 டம்ளர்
    நெய் - 2ஸ்பூன்
    சீனி- கால் ஸ்பூன்
    சோடா உப்பு -சிறிதளவு
    உப்பு-தேவைக்கு


செய்முறை

    எலும்பில்லாத சிக்கனை அரைத்து அதன் மேல் கொதிக்கும் நீர் சேர்த்து ஆறும் வரை வைக்கவும். (வேகவும் கொழுப்பு மேலே வரவும்)
    வாணலியில் எண்ணெய் சிறிதளவு சேர்த்து வெங்காயம் வதக்கவும்.
    பொன்னிறமானதும் அதில் பச்சை மிளகாய், கொத்தமல்லி,இஞ்சி பூடு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
    பின் எல்லாத்தூள்களையும் சேர்க்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும்.
    எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் கோழியில் உள்ள நீரை வடிகட்டி கோழியை சேர்க்கவும்.
    நீர் சேர்க்காமல், அடிபிடிக்காமல் நீர் வற்ற நன்கு வதக்கவும்.
    2 மணி நேரத்திற்கு முன்பே மாவிற்கு கொடுத்தவற்றை அனைத்தையும் சேர்த்து பூரி மாவு போல் பினைந்து ஊற விடவும்.
    உருண்டை பிடித்து சப்பாத்தி போல் பெரிய வட்டமாகத் தேய்க்கவும். அதை நடுவில் வெட்டி அரை வட்டமாக்கவும்.
    அதில் ஒன்றை எடுத்து ஓரங்களில் தண்ணீர் தடவவும்.
    வளைவாக இருக்கும் பகுதியினை ஒன்றின் மேல் இன்னொரு ஓரம் சேர்த்து கோன் போல் செய்துக்கொள்ளவும்.
    அதில் மசாலாவை வைத்து மூடி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Note:

சாஸுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். வீட்டில் ஏதேனும் சிக்கன் மிஞ்சினாலும் எலும்பில்லாமல் உதிர்த்து மேல் சொன்னபடி மசாலா செய்து சமோசா செய்யாலாம்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்