Author Topic: இறால் பக்கோடா  (Read 1301 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இறால் பக்கோடா
« on: December 05, 2011, 07:11:26 AM »
    தேவை:
    இறால் – 200 கிராம்
    எண்ணெய் – 200 மி.லி.
    பாசிபருப்பு மாவு – 50 கிராம்
    உப்பு – தேவைக்கேற்ப
    பச்சை மிளகாய், பூண்டு – சிறிதளவு
    சோம்புத்தூள் – சிறிதளவு
    கடலைமாவு – 100 கிராம்
    பொரிகடலை – 50 கிராம்
    அரிசி மாவு – 50 கிராம்
    வெங்காயம் – 100 கிராம்
    கறிவேப்பிலை – சிறிதளவு





    செய்முறை:
    சுத்தம் செய்த இறால் மீனை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். இறால் துண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு துருவல், கறிவேப்பிலை, உப்பு, சோம்புத்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். கலந்தவுடன் கடலைமாவு, அரிசிமாவு, பாசிப்பருப்பு மாவு, சிறிது சூடாக்கப்பட்ட எண்ணெய் சேர்த்து தண்ணீர் சேர்த்து உதிர்ந்து விடும் பக்குவத்தில் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிதமாக காய வைத்துக் பக்கோடா கலவையை போடும் போது உதிர்த்து போடவும். புரட்டி போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப்பரிமாறவும்.



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்