Author Topic: ~ வெற்றிலை மருத்துவம்:- ~  (Read 414 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெற்றிலை மருத்துவம்:-




தலைவலி ஏற்பட்டால் இரண்டு அல்லது மூன்று துளிகள் வெற்றிலைச் சாற்றை மூக்கினுள் விட்டால் தலைவலி தீரும். பாலூட்டூம் தாய்மார்களுக்கு பால் சுரக்கும்போது கட்டி உண்டாகும். வீக்கத்திற்கு வெற்றிலையை நெருப்பில் வாட்டி அப்படியே அடுக்கடுக்காக மார்பில் வைத்து கட்டினால் வீக்கம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து கொடுக்கலாம். தீப்பட்ட புண்கள் மீது வெற்றிலையை வைத்து வந்தால் புண் ஆறும். வெற்றிலை வேரைத்தின்று வந்தால் பாடகர்களின் குரல் சுத்தமாக வரும். வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் போட்டால் நெஞ்சுவலி, கப இருமல், மூச்சுமுட்டல், கடின சுவாசம் விலகும். வெற்றிலைச்சாற்றில் தேன் சேர்த்து உண்டால் இருமல் குறையும். தேள்கடி பட்டவர்களுக்கு ஒரு பெரிய வெற்றிலையில் சிறிது மிளகு வைத்து மடித்துக் கொடுத்து நன்றாக மென்று விழுங்கும்படி செய்தால் தேள் விஷம் நீங்கும்.