Author Topic: ~ எளிய இயற்கை வைத்தியம் :- ~  (Read 433 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எளிய இயற்கை வைத்தியம் :-




* ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தேக உஷ்ணம் சமப்படும்.

* நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.

* சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம்.

* வயிற்று எரிச்சல் சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.

* தொண்டைக்கட்டு ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.

* வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் ஐந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.

* பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.

* மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளுகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

* சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும். — with விஷ்ணு பிரியா செந்தாமரை கண்ணன்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ எளிய இயற்கை வைத்தியம் :- ~
« Reply #1 on: July 12, 2014, 08:59:28 PM »
எளிய இயற்கை வைத்தியம்:-




இலந்தைப்பழம்:
சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும்

இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வைட்டமின் 'ஏ' சத்தும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம் உதவிபுரிகிறது. இது உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

களாப்பழம்:
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.

நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு. உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும். உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.

ஆல்பக்கோடா பழம்:
தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் 'ஏ', 'பி' உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.

காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியை குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக குணமடையும்.

வேப்பம்பழம்:
வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும்.

வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும்.
பழம் உதிரும் சீசனில் நன்றாக கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் எடுத்துவிட்டு சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். எந்த அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றிவைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர்பான நோய் தீரும்.