Author Topic: என் அறிவின் செறிவே , நீ அறிவாயா???  (Read 421 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/


நின் சுவாச சுகந்தம்
கலவா காற்று
தீண்டிப்போயினும்
தீண்டாது
தாண்டிப்போயினும்
குளிர்வதேயில்லை
அறிவாயா ?

நின் நாசி நுகர்விற்க்கு
மறுதலித்த
மலரினம் யாதும்
மனம் மயக்கும்
மணம்
கமழ்வதேயில்லை
அறிவாயா ?

நின் நினைவின்
நீரருவியில்
நனைந்து திரும்பாத
வார்த்தையோ
வார்த்தைகள் வரிசேர்ந்த
வாக்கியமோ
வாக்கியங்கள் வடிவமைத்த
வர்ணனையோ
படிக்கப்படுவதும்
பகிரப்படுவதும்
பாராட்டப்படுவதும்
ஒரு புறம் கிடக்கட்டும்
பாவப்பட்ட பதிப்பு
பார்க்கபடுவதேயில்லை
என்பதையேனும்
அறிவாயா ??