Author Topic: ~ எளிய பாட்டி வைத்தியம் :- ~  (Read 621 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227472
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எளிய பாட்டி வைத்தியம் :-




மணலிக் கீரையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, பனை வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மார்புச் சளி குணமாகும்.

மார்பு புண்

கானாம்வாழைக் கீரையை அரைத்து, பெண்களின் மார்பில் ஏற்படும் புண்கள் மீது பற்றுப்போட்டால் அவை உடனே ஆறிவிடும்.

மார்பு வலி

நல்வேளைக் கீரைக் கீரையுடன் தாமரைப்பூ சம அளவு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மார்பு வலி உடனே குணமாகும்.

முகப்பரு

முளைக்கீரை சாற்றில் முந்திரிப்பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும்.

சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவி வந்தால் குணம் பெறலாம்.

முகப்பொலிவு

பருப்புக் கீரையுடன், குடை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். முகப்பொலிவும் கூடும்.

முடக்கு வாதம்

வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, பூண்டு (3 பல்), பெருங்காயத்துடன் (சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்துச் சாப்பிட்டால் முடக்குவாதம், விரைவாதம் ஆகியவை குணமாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227472
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ எளிய பாட்டி வைத்தியம் :- ~
« Reply #1 on: July 22, 2014, 06:59:49 PM »
எளிய பாட்டி வைத்தியம் :-




வெள்ளை ஒழுக்கு

சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களது அந்தரக்க உறுப்புக்களில் இருந்து வெள்ளை நீர் ஒழுக்கு இருக்கும். இதனால் அரிப்பு, எரிச்சல், புண் போன்றவை உண்டாகி வேதனைப்படுத்தும். இந்தக் குறைபாடு உள்ளவர்கள், புளியாரைக் கீரையை 15 நாட்களுக்கு (காலையில் மட்டும்) சமைத்துச் சாப்பிட்டால் வெள்ளை ஒழுக்கு பிரச்னை தீரும்.

வெண்குஷ்டம்

அம்மான் பச்சரிசி, கீழா நெல்லி, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து, 6 மாதங்களுக்கு தினமும் காலை மாலை இரு வேளையும் 15 கிராம் அளவு சாப்பிட்டால் வெண்குஷ்டம் குணமாகும்.

விஷக்கடி

சிறுகீரை வேர், குப்பைமேனி வேர், சிறுபீளை வேர் மூன்றையும் சம அளவில் எடுத்து, அலசி நன்றாக அரைத்து, எலுமிச்சம் பழம் அளவு அதிகாலையில் சாப்பிட்டு உணவில் உப்பு சேர்க்காமல் பத்தியம் இருந்தால், வண்டுக்கடி, தேள்கடி போன்ற அனைத்து விதமான விஷக்கடிகளும் குணமாகும்

விந்து கழிதல் நீங்க

அம்மான் பச்சரிசி கீரையுடன் கிழா நெல்லி இலையையும் சம அளவு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலக்கி காலை, மாலை இரு வேளை என தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் தூக்கத்தில் கனவு நிலையில் விந்து வெளியேறுதல் குறைபாடு சரியாகும்.

வலிப்பு

அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்புட் கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் சன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.

துயிலிக் கீரையுடன் மிளகு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் வலிப்பு நோய்கள் மறையும்.