Author Topic: ~ ஜவ்வரிசி கார அப்பம்! ~  (Read 461 times)

Offline MysteRy

~ ஜவ்வரிசி கார அப்பம்! ~
« on: July 07, 2014, 11:17:34 AM »
ஜவ்வரிசி கார அப்பம்!



தேவையானவை:
ஜவ்வரிசி - 100 கிராம், அரிசி மாவு - 100 கிராம், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் - ஒன்று, தயிர் - ஒரு கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு ஜவ்வரிசியை வறுக்கவும். தேங்காயைத் துருவி கெட்டியான பால் எடுத்து, வறுத்த ஜவ்வரிசியை இதில் ஊறவைக்கவும். ஊறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, பெருங்காயத்தூள், தயிர், கிள்ளிய கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்துக் கலந்து, இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
குழியப்பக் கல்லை அடுப்பில் வைத்து, நெய் விட்டு, காய்ந்ததும், மாவை ஊற்றி சுட்டு எடுக்கவும். அல்லது வாணலியை அடுப்பில் வைத்து, நெய் விட்டு கரண்டியில் மாவை எடுத்து அப்பம் போல் ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.