Author Topic: எங்கும் கவிதை எதிலும் கவிதை  (Read 504 times)

Offline thamilan

நான் சிந்தாமல் சிதறாமல்
தின்னும் சோற்றுப் பருக்கைகளை
இறைத்து  இறைத்து
ஒரு குழந்தை சாப்பிடுவது
ஒரு கவிதை

வெள்ளி நாணயம் சிதறியது போல
சிரித்துக் கொண்டு திரிந்தவள்
தலை குனிந்து வெட்கப்படுகையில்
அதும் கவிதை

குழந்தை சிரிப்பதும் அழுவது
அழகான கவிதை
துள்ளி நடப்பதும் தொட்டு முகம் வருடுவதும்
இனிமையான கவிதை

சீவி முடித்து பெண்
சிங்காரித்து நின்றாலும் கவிதை
சேலை கலைந்தது காமம்
சொட்ட நின்றாலும் அதும் கவிதை

பக்கத்தில் இருப்பதெல்லாம் கவிதை
பார்க்கும் இடத்தில்
கண்ணுக்கு தெரிவதில்லாம் கவிதை

Offline Maran




 :) உண்மைதான் நண்பரே சரியாகதான் சொல்லுகிறீர்கள்...



 "உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
 உருவெடுப்பது கவிதை
 தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
 தெரிந்துரைப்பது கவிதை."


- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை