Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ வெள்ளைப்படுதல் ...தாமதமான மாதவிடாய்... ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ வெள்ளைப்படுதல் ...தாமதமான மாதவிடாய்... ~ (Read 568 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227465
Total likes: 29060
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ வெள்ளைப்படுதல் ...தாமதமான மாதவிடாய்... ~
«
on:
June 27, 2014, 10:45:44 AM »
வெள்ளைப்படுதலை விரட்டியடிக்கும் மணத்தக்காளி !
மாதவிடாய்ல ஏதும் கோளாறுனா... பாவம், பொண்ணுங்க மனசொடிஞ்சு போயிருவாக. அந்த நேரத்துல அவங்களுக்கு ஆறுதலா நாலு வார்த்தையும்...நல்ல கவனிப்பும் இருக்கணும். கூடவே, நாஞ்சொல்ற மருந்துங்களையும் பக்குவமா தயார் பண்ணிச் சாப்பிட்டா... எல்லா பிரச்னையும் பஞ்சா பறந்துடும்.
வெள்ளைப்படுதல் சரியாக...
ஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்-பட்டிருப்-பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடர்ந்து மூணுநாள் குடிச்சீங்கனா... வெள்ளைப்படுதல் வராது.
வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி, அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா... நல்ல குணம் கிடைக்கும்.
தாமதமான மாதவிடாய்...
சில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க பெருந்துத்தி இலை - 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயித்துல மென்னு தின்னணும். மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க... ஒழுங்கா மாதவிடாய் வரும்.
மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து-தான். அதை மையா அரைச்சி நெல்லிக்-காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.
சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும். ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும்.
கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா... மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.
மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு...
வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா... மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.
கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ வெள்ளைப்படுதல் ...தாமதமான மாதவிடாய்... ~