Author Topic: ~ திரு.வி.க வின் சிந்தனை துளிகள்:- ~  (Read 631 times)

Offline MysteRy

திரு.வி.க வின் சிந்தனை துளிகள்:-




* அறிவுரை கூற விரும்புபவர்கள், தன்னிடம் உள்ள குறைகளையும் போக்கிய பிறகே, பிறருக்கு போதனை செய்ய வேண்டும்.

* எல்லா உயிர்களையும் தன்னுயிராக எண்ணி, மறந்தும் பிறருக்கு கேடு செய்யாமல், தன்னலம் கருதாதமல், எல்லா உயிர்களையும் கருணையால் நேசிப்பவனுமே மேலான மனிதன்.

* பெண்ணின் பெருமையை உணராத மனிதர்கள் நாகரிகம் என்பதே அறியாதவர்கள். காலநிலையை உணர்ந்து பெண்களும் தர்மத்திற்கு மாறுபடாதவழியில் தங்கள் உரிமையைப் பெற முயலவேண்டும்.

* ஆன்மிக சக்தி நம் மனதில் எழுச்சி பெற அன்பு, தியாகம் போன்ற நல்ல குணங்கள் இருக்க வேண்டும்.