Author Topic: ~ சில விலங்குகளின் அதிசய குணங்கள் :- ~  (Read 1268 times)

Offline MysteRy

சில விலங்குகளின் அதிசய குணங்கள் :-




1. பாம்புகளுக்கு பொதுவாக ஒரே ஒரு நுரைஈரல் மட்டுமே இருக்கும், அதனுடைய நீளமான உடலினுள் மாற்ற உறுப்புகளுக்கும் இடம் ஒதுக்குவதற்காக இந்த பண்பை பெற்றுள்ளது. (சில பாம்புகளுக்கு இரண்டு இருக்கலாம் மிக சிறிய நுரைஈரல் (left side rudimentary lung) ஒருபக்கம் மிக நீளமான நுரைஈரல் இன்னொரு பக்கம் இருக்கும் (right lung)).

2. Orca or Killer whale எனப்படும் திமிங்கல இனத்தில் ஆண்களைவிட பெண் திமிங்கலங்கள் நீண்டநாள் உயிர்வாழும்.

3. உங்களுக்கு தெரியுமா யானைகள் கடலினுள் நீந்தும் என்பதை. சில நேரங்களில் யானைகள் கடலினுள் சுமார் ஒரு மைல் தூரம் வரை நீந்தியதை கண்டுள்ளனர்.

4. உங்களுக்கு தெரியுமா கோழிகள் தொடர்ந்து 13 விநாடிகள் பறந்ததே உலக சாதனையாகும்.

5. நம்முடைய கைரேகை எப்படி ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்குமோ அதுபோல் சிங்கங்களின் நாசித்துவாரம் அமைந்துள்ள Muzzle பகுதியும் நீண்ட முடிகளை கொண்ட மீசை பகுதி whiskers-ம் ஒவ்வொரு சிங்கங்களுக்கும் வித்தியாசமாக இருக்கும்

6. பன்றிகளால் தலையை தூக்கி ஆகாயத்தை பார்க்க முடியாது.

7. தங்க மீன்களின் நியாபகசக்தி மூன்று விநாடிகள் மட்டுமே.

8. உங்களுக்கு தெரியுமா Ant Lion இவை எறும்புகளும் இல்லை சிங்கங்கமும் இல்லை இவை ஒரு வகையான பூச்சியினம். (கிராமங்களில் வீட்டின் ஓரத்தில் காணப்படும்)

9. Male gypsy moth எனப்படும் பழபூச்சி இனத்தில் ஆண் பூச்சிகள் பெண் பூச்சியினை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூர தொலைவிலே smell மூலம் கண்டுபிடித்துவிடும்.

10. Flamingo என்னும் பறவை தனது தலையை கீழே குனிந்து கொண்டால் மட்டுமே உணவு உட்கொள்ள முடியும்.

11. டால்மேசன் நாய்கள் பிறக்கும் பொது உடலில் புள்ளிகள் இருக்காது. பிறந்து சுமார் நான்கைந்து நாட்களுக்கு பிறகே உடலில் கரும்புள்ளிகள் உருவாகும்.

12. 1.Hooded Pitohui (Pitohui dichrous) இந்த இன பறவைகள் நியூ கினியா தீவுகளில் மட்டுமே காணப்படும். இதன் தோலிலும் இறகிலும் மூளையை தாக்கும் விஷம் உள்ளது. இந்த பண்பு எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துகொள்வதர்க்கே. இந்த இனத்தில் ஆறு வகையான பறவைகள் உள்ளன அனைத்தும் விசமுடயதே. உலகின் மிக அதிக விஷமுடைய பறவை இதுதான். இந்த விஷத்தினை சுயமாக உற்பத்தி செய்ய முடியாது. பொதுவாக உணவின் மூலமோ அல்லது பிற விஷ உயிரினங்களின் மூலமோ பெற்றுக்கொள்ளும்.